சியோல்: போதைப் பொருள் வழக்கில் சிக்கியிருந்த தென்கொரியா நடிகர் லீ சுன் கியூன் இறந்த நிலையில் ஒரு காரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை மூலம் தனது உயிரை போக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற படம்தான் பாராசைட். இதில் நடித்திருந்தவர் லீ சுன் கியூன். இப்படத்தில் இவரது நடிப்பு அபாரமாக இருந்தது. பலரையும் கவர்ந்த நடிகர் இவர்.
இந்த நிலையில் மத்திய சியோல் நகரில் உள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில், லீயின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடிகர் லீ போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் சிக்கியிருந்தார். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. விசாரணையிலும் இருந்து வந்தார். இந்த நிலையில்தான் அவரது மரணம் வந்துள்ளது.
மிகப் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் லீ. ஆனால் அவரது போதைப் பொருள் பழக்கம் அவரது பெயரைக் கெடுத்து விட்டது. அவருக்கான பட வாய்ப்புகள் நின்று போயின. டிவி தொடர்களிலும் அவர் நீக்கப்பட்டார். விளம்பரங்களிலிருந்தும் நீக்கப்பட்டார்.
அனைத்து வகையிலும் புறக்கணிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டதால் விரக்தி அடைந்து லீ தற்கொலைக்கு முடிவு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. லீ சுன் கியூனின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}