சென்னை: இயக்குநர் அமீர் சொன்ன பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்ன.. பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்காக என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டுள்ளார் இயக்குநர் சசிக்குமார்.
பருத்தி வீரன் பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல. இயக்குநர் அமீர் மீதான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் கருத்துக்கள் திரையுலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. இயக்குநர்கள் பலரும் அமீருக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு வந்தனர். இதன் உச்சமாக மூத்த இயக்குநர் பாரதிராஜா நேற்று காட்டமான அறிக்கை ஒன்றை விட்டார்.
இந்த அறிக்கையின் எதிரொலியாக இன்று காலை வருத்தம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. அதில் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அமீர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறினார். நான் பதில் அளித்தபோது சில வார்த்தைகளை குறிப்பிட்டேன். அது அவரை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு முடித்துக் கொண்டு விட்டார்.
இப்போது இந்த பொத்தாம் பொதுவான அறிக்கைக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இயக்குநர் சசிக்குமார் முதல் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது
அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?
"நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்" என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன?
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு? என்று கேட்டுள்ளார் சசிக்குமார்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}