நான் எங்கு சென்றாலும்.. என்னை விட மாட்டேன்றாங்க.. மகிழ்ச்சியில்.. "ஜோ" பவ்யா த்ரிக்கா!

Jan 05, 2024,10:30 AM IST

சென்னை: சிறுவயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஜோ படத்தில் நடித்ததன் மூலமாக நான் எங்கு சென்றாலும்  மக்கள் என்னை அங்கீகரித்து பேசுகிறார்கள் என ஜோ பட நாயகி 

பவ்யா த்ரிக்கா மகிழ்வான  நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.


ஹரிஹரன் ராம் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஜோ படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதில் ரியோ ராஜ் ,பவ்யா த்ரிக்கா, மாளவிகா மனோஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராகுல் கே ஜி விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய ,சித்து குமார் இசையமைத்துள்ளார்.


க்யூட் தமிழ்




இந்தப் படம் பவ்யாவுக்கு இந்த வருடம் மகிழ்ச்சிகரமான ஆண்டாக மலர உதவியுள்ளது. க்யூட்டாக தமிழ் பேசும் இவர் அச்சு அசல் நம்மவர்கள் மாதிரியே பேசுகிறார்.. அப்படின்னா பவ்யா நம்ம ஊர் இல்லையா என்று நீங்க கேட்கலாம்.. எக்ஸாக்ட்லி நம்ம ஊர்தான்.. ஆனால் பேசிக்கலி, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண். இருந்தாலும் கூட சென்னையில் வாழ்ந்த இவர் தமிழை அச்சு அசலாக பேசுவது மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. 


இவருக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் ஆர்வம் அதிகமானதால் ,தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் மாடலாக பணியாற்றியவர். நடிப்பில் மட்டுமில்லாமல் படிப்பிலும்  தனது திறமையின் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பட்டம் பெற்றார். பின்னர் மாடலிங் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கி, தமிழில் கதிர் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஜோ திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.


இப்படத்தின் மூலம் இவர் பிரபலமாக அறியப்பட்டார். காதல் ,நட்பு, எமோஷனல் கலந்த கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவானது . பவ்யாவின் நடிப்பு இளைஞர்கள் மட்டும் இன்றி  அனைவரது  மனதையும் வெகுவாக கவர்ந்தது. இது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருப்பவர்.இவர் அவ்வப்போது அழகான, ஸ்டைலான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருவார். இவரைப் பின் தொடர்வதற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.


சின்ன வயசிலிருந்தே ஆசை


ஜோ படம் குறித்தும், தனது திரைப்பயணம் குறித்தும் பவ்யா திருவாய் மலர்ந்தருளியது...




சிறுவயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக இருந்தது. என் அப்பாவின் உறுதுணை எனக்கு கை கொடுத்தது. பல தமிழ் திரைப்படங்களை பார்த்து தமிழும் சினிமாவின் சாராம்சத்தை பார்த்தே வளர்ந்தேன். நடிப்பிற்கான தேடலில் இருக்கும்போது கதிர் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. அதைத் தொடர்ந்து கல்லூரியிலும் என்னுடைய தோழிகள் என்னை ஊக்குவித்ததால் ஜோ என்ற திரைப்படத்தில் நான் நடித்தேன்.


ஜோ திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்வான நினைவுகளாக இருக்கிறது. வெற்றி அப்படிங்கிறது ஒரு சராசரியாக இருக்கக் கூடிய நடிகைகளுக்கு எந்த அளவுக்கு மாறும் என்று நினைக்கும் போது ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. இன்று நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை அங்கீகரித்து வந்து பேசுகிறார்கள். அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளேன்.


சமந்தாவைப் பிடிக்கும்





அதே நேரத்தில் ஜோ திரைப்படம் எனக்கு கொடுத்த அங்கீகாரமும் புகழும் மனதில் வைத்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இந்த ஆண்டில் சிறந்த நடிகையாக வலம் வருவேன் என நம்புகிறேன். எனக்கு சமந்தாவை ரொம்ப பிடிக்கும் காரணம் என்னவென்றால் எவ்வித பின்புலமும் இல்லாமல் தமிழ், தெலுங்கு என்று பலமொழிகளில் நடித்து மக்கள் மனசுல இடம் பெற்று இருக்காங்க அவங்க எனக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்காங்க என்று கூறினார்.


தன்னுடைய நடிப்பால் மக்களை வசீகரிக்கும் திறன் கொண்ட பவ்யாவின் மீது சினிமாவின் பார்வையை  பட ஆரம்பித்துள்ளது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது போல் இவரின் நடிப்பின் திறமையை தமிழ் சினிமா அங்கீகரித்தது வருகிறது. இவர் மேன்மேலும் வளர நாமளும் வாழ்த்து தெரிவிப்போம்..!

சமீபத்திய செய்திகள்

news

Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்