- ஸ்வர்ணலட்சுமி
ஸ்ரீ கால பைரவர் வழிபாடு: மாசி மாதம் தேய்பிறை அஷ்டமி 2025 பிப்ரவரி 20 வியாழன் அன்று காலை 7:30 மணி முதல் வெள்ளி பிப்ரவரி 21, 9: 04 வரை அஷ்டமி திதி உள்ளது. இந்நாளில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும் என்பது ஐதீகம்.
அஷ்ட பைரவர் போற்றி:
ஓம் கால பைரவா போற்றி
ஓம் கல்பாந்த பைரவா போற்றி
ஓம் குரோத பைரவா போற்றி
ஓம் கபால பைரவா போற்றி
ஓம் சம்ஹார பைரவா போற்றி
ஓம் உன்மத்த பைரவா போற்றி
ஓம் கண்ட பைரவா போற்றி
ஓம் உக்கிர பைரவா போற்றி
ஸ்ரீ கால பைரவர்:

*சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்று பைரவர் வடிவம்.
*காலபைரவர் சிவனின் ருத்ர ரூபமாக இருப்பவர்.
*கபாலத்தை கையில் ஏந்தியவர் .காதுகளில் அழகிய குண்டலங்களை தரித்திருப்பவர்.
*காலபைரவர் கருமை நிறம் உடையவர்.
*சர்ப்பத்தை பூணூலாகக் கொண்டவர்.
*இடையூறுகளை மாய்த்து தம் பக்தர்க்கு இன்பம் அளிப்பவர்.
*பன்னிரு கைகளுடன், சந்திரனை தலையில் வைத்தும் ,சூலாயுதம், பாச கயிறு ,அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் நிர்வாண ரூபமாய் காட்சி தருபவர்.
தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபடுவது சிறப்பு. ஆலயங்களில் வடைமாலையை பைரவருக்கு சாத்தி வழிபடுவர் .வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வர்.
பண பிரச்சினை, கடன் தீர, வறுமை நீங்க, திருமணத்தடை நீங்க, செல்வம் தங்க ,நிறைய பணம் சேர ,வியாபாரம் முன்னேற்றம் ,தொழில் முன்னேற்றம் ,தீராத நோய்கள் தீர, பயம் அகல, அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்க மேலும் எந்தவித பிரச்சினைகள் இருந்தாலும் ஸ்ரீ கால பைரவர் வழிபாடு செய்வதால் பக்தர்களை எட்டு திசைகளில் இருந்தும் காத்து அருள்வார் காலபைரவர்.
சிவாலயங்களில் வீற்றிருக்கும் கால பைரவரை வழிபட்டு 108 ஸ்ரீ காலபைரவர் அஷ்டோத்திரம் படிக்க கவலைகள் அனைத்தும் கரைந்து போகும். தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவர் வழிபாடு செய்து அனைத்து வளங்களும் நலங்களும் பெறுவோமாக.
மேலும் ஆன்மீக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பரபரப்பு.. படபடப்பு.. அந்த கடைசி நேர டென்ஷன்.. THE FINAL SUBMISSIONS..!
ஒரு கழுதைக் கதை சொல்ட்டா பாஸ்.. Imagination of donkey's evaluation!
தொழில்நுட்பக் கோளாறு: சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
காலை நேரப் பூங்குயில்.. Morning is good When....!
எல்லாத்தையும் மறந்துட்டு.. கொஞ்சம் அமைதியாக.. Why We Need Meditation?
அமைதி அமைதி அமைதியோ அமைதி.. SILENCE CAN SPARK THE GROWTH OF NEW BRAIN CELLS!
தனிமை.. ஒரு வசீகரம்!
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
{{comments.comment}}