அனைத்துத் துறைகளிலும் பெண் குழந்தைகள் சாதனை.. பெருமிதத்துடன் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Jan 24, 2025,03:12 PM IST

டெல்லி: தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்து அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான நமது உறுதிபாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகளின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.


என்னதான் நாட்டில் ஆணும் பெண்ணும் சமம் என்ற சமத்துவம் குறித்து பேசினாலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இன்று மட்டும் இல்லை, பண்டைய காலம் முதல் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொண்டு அதனை கருவிலேயே அழிப்பதும், மீறி பெண் குழந்தை பிறந்து விட்டால் அதனை கள்ளிப்பால் கொடுத்துக் கொள்வதும் என பல்வேறு நடைமுறைகள் வழக்கத்தில் இருந்து வந்தன. 




நாளடைவில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவது சட்டப்படி குற்றம், மீறி அறிந்து கொள்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என சட்டம் கடுமையாக்கப்பட்ட பின்னர் கருவிலேயே பெண் குழந்தைகள் அழிப்பது என்பது குறைந்து விட்டது. அதேபோல் தற்போது குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் அல்லது ஒரு குழந்தைகள் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில் பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் நிலைமையும் மலையேறி விட்டது. 


அதேசமயம், பெண் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்வது, பெண் குழந்தைகளை சீண்டுவது, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவது என பல்வேறு இன்னல்களை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். 


இதனைக் கருத்தில் கொண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டு ஆணையத்தால் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


இதைத் தொடர்ந்து சமூகத்தில் பெண் குழந்தைகளை காப்பதற்கும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், பல்வேறு திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது பெண் குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு, பெண்களை பாதுகாத்தல், குழந்தை திருமணம், பெண்களுக்கான உரிமைகள், மரியாதை போன்ற பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் பெண் குழந்தைகளின் பரிணாம வளர்ச்சியால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். அதே சமயத்தில் வீடுகளிலும் பெண் குழந்தைகள் பிறந்தால் கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்துக் குறிப்பில், தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்து அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான நமது உறுதிபாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகளின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது.


பெண் குழந்தைகளை மேம்படுத்துவதில் பங்களிக்கும் கல்வி தொழில்நுட்பம் திறன்கள் சுகாதாரம் போன்ற துறைகளில் நமது அரசு கவனம் செலுத்தியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிராக எந்த பாகுபாடும் நடக்காமல் பார்த்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.


மத்திய அமைச்சர் எல். முருகன் வாழ்த்து


அதேபோல் மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  சமுதாயத்தில் பெண்களுக்கான சம உரிமையை மேம்படுத்துவதை வலியுறுத்துகின்ற நோக்கத்துடன் இன்றைய தினத்தை தேசிய பெண் குழந்தைகள் தினமாக நாம் கடைபிடிக்கிறோம். 


தங்களுக்கு கிடைக்கப்பெற்ற முக்கியத்துவத்தின் அடிப்படையில் தேசத்தின் நிலையான வளர்ச்சிகளும், கல்வி மற்றும் இன்ன பிற துறைகளிலும் பெரியதளவில் பங்காற்றி வரும் நாட்டில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் மகளிர்கருக்கும் தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்