பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

Jul 24, 2025,12:41 PM IST

சென்னை: பாமக பெயர், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி டிஜிபியிடம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.


பாமகவில் கடந்த சில காலமாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இது விரைவில் சரியாகிவிடும் என்று அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறிவந்தாலும், பிரச்சனை தற்போது பெரிதாகிக்கொண்டே தான் வருகிறது. இதனால் பாமக தொண்டர்களும் வருத்தமடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பாமக நிறுவனர் ராமதாசும், அன்புமணியும் அமைதியாக இருந்து வந்த நிலையில்,  பாமக பெயர், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி டிஜிபியிடம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.


இது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாமகவை பலப்படுத்தும் வகையில் அன்புமணி ராமதாஸ் புதிய பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார். அதன்படி, ராமதாஸ் பிறந்தநாளையொட்டி சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். நாளை திருப்போரூரில் இந்த பயணம் தொடங்க உள்ளது.




இந்நிலையில், இன்றுதைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் பேசுகையில், சிறப்பு பொதுக்குழுவின் படி பாமக செயல்தலைவராக அன்புமணி தொடர்வார். தன்னை தலைவர் எனக் கூறிக்கொண்டால் நடவடிக்கை பாயும். நடைப்பயணத்தின் போது பாமக கொடியை யாரும் பயன்படுத்தக்கூடாது. அன்புமணியின் நடை பயணத்திற்கு தடை விதிக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாமக தலைமையகம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. பாமகவிற்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. தொண்டர்களும், நிர்வாகிகளும் இனி வேறெங்கும் செல்ல வேண்டாம்.


ஒட்டுக்கேட்பு கருவி இங்கிலாந்து அல்லது பெங்களூரிலிருந்து வாங்கப்பட்டிருக்கலாம். ஏன் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தார்கள், யார் வைத்தார்கள் என எனக்குத் தெரியும். அதை நான் அடுத்த வாரம் கூறுகிறேன்  என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்