சென்னை: ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது... என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன... என உதயம் திரையங்கு மூடப்படுவதற்கு வைரமுத்து வருத்தத்துடன் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்று உதயம் தியேட்டர். உதயம் வளாகத்தில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 திரைகள் இயங்கி வந்தன. கடந்த 41 ஆண்டுகளாக இந்த திரையரங்கம் செயல்பட்டு வந்தது. நடுத்தர குடும்பங்களுக்கே உரிய திரையரங்கு என்றால் அது உதயம் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாகி இருந்த ஒரு அரங்கு. குறைந்த விலையில் இங்கு டிக்கெட் விற்கப்பட்டதுடன், இடைவெளிக்கான ஸ்னாக்ஸ்சும் தரமாக குறைந்த விலைக்கு கிடைக்கும் என்பது இதன் சிறப்பு.
முக்கிய திரை நட்சத்திரங்களின் படங்கள் இங்கு ஏராளமாக வெளியிடப்பட்டு, ரசிகளின் விசில் சத்தமும் அதிகம் இடம் பெற்ற இடம் இது. இன்றைய நவீன கால வளர்ச்சியின் காரணமாக அதிகளவில் இங்கு யாரும் வராததினால் இத் திரையங்கம் மூடப்படுகிறது. இதை ரசிகர்களால் தங்கிக் கொள்ள முடியவில்லை என்று பலர் தங்களின் மனக்குமுறல்களை வெளிபடுத்தி வருகின்ற வேலையில், ஒரு திரைக் கலைஞனும் தாங்கிக் கொள்ள முடியாமல் குமுறி வருகின்றார். அவர் தான் வைரமுத்து. உதயம் திரை வளாகம் மூடப்படுவது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;
இதயம் கிறீச்சிடுகிறது
முதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை
வெளியிட்ட உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றன
மாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு
எதுவும் தப்ப முடியாது என்று
மூளை முன்மொழிவதை
இதயம் வழிமொழிய மறுக்கிறது
இனி
அந்தக் காலத் தடயத்தைக்
கடக்கும் போதெல்லாம்
வாழ்ந்த வீட்டை விற்றவனின்
பரம்பரைக் கவலையோடு
என் கார் நகரும்
நன்றி உதயம் என்று கூறியுள்ளார்.
ஞானச்செறுக்கு நிறைந்த.. பாட்டுப் புலவன்.. முண்டாசுக் கவிஞன் .. பாரதியாரின் நினைவு நாள் இன்று!
பாமகவின் செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!
தொடர்ந்து 3வது நாளாக மாற்றமின்றி இருந்து வரும் தங்கம், வெள்ளி விலை.... இதோ இன்றைய விலை நிலவரம்!
பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11, 2025... இன்று அன்பு பெருகும்
திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை
திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
{{comments.comment}}