சென்னை: வரும் கல்வியாண்டு முதல் அரிசி உப்புமாவிற்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
வரும் கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும். அரிசி உப்புமாவிற்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தும் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பாடு அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தால் ஆரோக்கியம் மட்டும் அல்லாமல் வகுப்பறையில் குழந்தைகளின் ஈடுபாடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக கல்வித்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டில் இத்திட்டத்தில் அரிசி உப்புமாவிற்கு பதிலாக, சாம்பாருடன் பொங்கல் வழங்கப்பட உள்ளது. மேலும், பள்ளி சீருடைகள் தைக்க தையல் கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எடை குறைவாக உள்ள 92 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு அந்த குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர், குழந்தைகள் நல மையங்கள் எல்லாம் ஸ்மார்ட் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டத்திற்கு இதுவரை 721 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் தோழி விடுதிகள் என்பதை இலக்காக வைத்து இந்த அரசு செயல்பட்ட வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
{{comments.comment}}