சென்னை: அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய பேச்சை கண்டித்து ஏப்., 16ம் தேதி சென்னையில் அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இலவச பேருந்து திட்டத்தின் மூலம் பெண்கள் பயணிப்பதை ஓசி டிக்கெட் என்று கூறி பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 6ம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். அவர் ஆபாசமாக பேசியது தொடர்பாக வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, கழக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி அவர்கள், அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குரூர வக்கிரத்தின் உச்சம். நாளாந்தர பேச்சாளர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். தமிழ்நாட்டின் நாகரிகத்தை, அரசியல் பண்பாட்டை பொன்முடி அசிங்கப்படுத்தியுள்ளார்.
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் வருகிற 16ம் தேதி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}