- பூரணவள்ளி சேகர்
அழகப்பபுரம் ஓர் அழகிய சிற்றூர். அந்த கிராமத்தில் வசந்தா இட்லிக்கடை வைத்து நடத்தி வந்தாள். ஊர் சிறியது என்றாலும் அங்கே மூன்று நான்கு இட்லிக் கடைகள் இருந்தன.
குறைந்த அளவே அரிசியைத் தன் மகளின் உதவியுடன் கைப்பட ஆட்டி காலை நேரத்தில் இட்லி சுட்டு விற்பது வசந்தாவின் பழக்கம். குறைந்த அளவே வருமானம் இருந்தது. வசந்தாவும் இந்திராவும் மட்டுமே வேலை செய்வார்கள்.
இந்திராவிற்கு வருமானம் உயர்ந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆவல் இருந்தது. பெரிய பாத்திரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை வேறொரு பாத்திரத்தில் எடுத்து வந்து பயன்படுத்துவார்கள்.
ஒரு நாள் கையிலிருந்த கொத்தமல்லி சட்னி மாவு இருந்த சிறிய பாத்திரத்தில் கொட்டிவிட்டது. மாவை கீழே கொட்ட மனமில்லாமல் அதை இட்லியாக வார்த்தாள் இந்திரா.

இட்லி பச்சை நிறமாகவும் சுவையாகவும் இருந்தது. அதன் நிறத்தைப் பார்த்ததும் வாடிக்கையாளர்கள் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிட்டனர்.
அடுத்த நாளிலிருந்து தக்காளி பீட்ரூட் கேரட் கொத்தமல்லி போன்றவற்றின் சாறு கலந்த இட்லியைத் தயார் செய்தனர்.
வண்ண வண்ண இட்லிகள் அனைவரையும் கவர்ந்தது. இட்லிக்கடை வியாபாரம் அமோகமாக நடந்தது.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
இட்லிக்கடை.. ஒரு நிமிடக் கதை (36)
தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை இன்று சந்திக்கிறார் முதல்வர் விஜய்: காரணம் இது தானா?
ஞானத்தின் தெளிவு!
காலம் மறைத்தாலும் என்றும் நம் மனதில் இருந்து மறையாத கலாம்!
North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}