- பூரணவள்ளி சேகர்
கோமளா தன் பெண் பிள்ளைகள் இருவரையும் நேரமாகி விட்டது சீக்கிரம் எழுந்திருங்கள் என்று எழுப்பினாள். விடுமுறை நாளில் கூடத் தூங்க விட மாட்டாயே அம்மா என்று சலித்துக் கொண்டே திரும்பிப் படுத்துத் தூங்கினர் இருவரும்.
இரவெல்லாம் இராக் கோழி போல விழித்திருக்கிறது காலையில் தாமதமாக எழுந்திருக்கிறது. மதிய வேலையிலும் நல்லா தூங்குவது சரிதானா என்று கேட்டுக் கொண்டே மறுபடியும் கோமளா பிள்ளைகளை எழுப்பினார்.
கொலு வைத்தாயிற்று. மாலையில் அம்மனுக்கு பூக்கள் மாற்றி அலங்காரம் செய்ய வேண்டும். பிரசாதம் தயார் செய்ய வேண்டும். வீட்டில் நிறைய வேலைகள் இருக்கின்றன. தனக்கும் உடம்பு சுத்தமாக முடியவில்லையே என்று அங்கலாய்த்தார் கோமளா.

தனக்கு உடல்நிலை நன்றாக இருக்கும் போது இவர்களைத் தேடவில்லையே என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டு மெதுமெதுவாக வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். முக்கால் பகுதி வேலைகளை முடிக்கும் போது இருவரும் எழுந்து வந்தனர்.
அவர்கள் குளித்து முடித்து வந்து சேர்வதற்குள் கோமளா முழுமையாக அனைத்து வேலைகளையும் முடித்து பூஜைக்குத் தயார் நிலையில் இருந்தார். மகள்கள் இருவரும் நாங்கள் செய்திருப்போமே நீ ஏன் செய்தாய் என்று கோபம் கொண்டனர்.
கோமளாவிற்கு முதுகு மற்றும் கால்வலி அதிகமாக இருந்ததால் அதிகமாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருந்தார். கொலு வைப்பதற்கு முன்பு கோமளாவின் உடல்நலமின்மையால் மிகவும் எளிமையாக கோலு வைக்கப் போவதாக முடிவெடுத்தார்.
எப்போதும் போல் விமரிசையாகச் சேய்ய வேண்டும். வேலைக்கும் கல்லூரிக்கும் இருவரும் விடுப்பு எடுத்து முழுமையாகச் செய்கிறோம் என்று உறுதியாக சொல்லியிருந்தனர்.
திருமணத்திற்கு முன் கோமளா தன் அம்மாவிடம் இதேபோல் நடந்து கொண்டமுறை கோமளாவின் கண் முன் நிழலாடியது.
முதல் நாள் பூஜை பெண் பிள்ளைகளின் உதவியின்றி இனிதே முடிந்தது.
மீதமுள்ள நாட்களில்?????????
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
நவராத்திரி ஸ்பெஷல்.. அடுத்த நான்கு நாட்களுக்கு இப்படித்தான் கும்பிடணும்!
தெகிட்டினால் விருந்தும் கெடும்.. ஔவையின் ஆத்தி சூடி 60 பொன்மொழிகள் (3)
THE LOST STAR
நெஞ்சில் நடமிடும் நவ (ரசம்) ராத்திரி நினைவுகள்!
Cute story: தோழி!
நைனா எப்ப வருவார்?
பூஜை.. ஒரு நிமிடக் கதை (33)
Monday Special Dish: ஆவலைத் தூண்டும் அவல் உப்புமா!
விழித்துக் கொள்!
{{comments.comment}}