- பூரணவள்ளி சேகர்
தாயில்லாத தன் மகள் அஞ்சனா மீது அளவு கடந்த பாசத்துடன் வளர்த்து வந்தார் வீரகுமார். வீரகுமார் கனிவும் கண்டிப்பும் நிறைந்தவர். தன் வருமானத்திற்கு ஏற்றவாறு வாழ வேண்டும் என்பதே அவர் கொள்கை.
அஞ்சனாவிற்கோ அவள் கேட்டவுடன் எதுவும் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் தன் அப்பாவின் மீது அவ்வப்போது வரும். நீண்ட நாளாகத் தான் கேட்ட முத்து மாலையை அப்பா வாங்கித் தரவில்லை என்பது கோபமாக மாறியிருந்தது.
ஆயுதபூஜைக்கு சாமி கும்பிட்ட பின்பு வீரகுமாரின் உழைப்பைப் பாராட்டி பத்தாயிரம் ரூபாய் பரிசாக வழங்கினார் முதலாளி செல்வம். அதனைப் பத்திரமாக வைத்திருந்து தீபாவளி போனஸ் பணத்துடன் சேர்த்து தங்கத்தில் கோர்த்த ஒரு அழகான முத்துமாலையை ஆசையாக வீரகுமார் வாங்கினார்.

முத்துமாலையக் கொடுத்துத் தன் மகளை ஆச்சரியப் படுத்த வேண்டும் என்று வேகமாக வீடு திரும்பினார். வீட்டில் மகள் அஞ்சனா இல்லை . நான் பக்கத்து தெருவில் உள்ள பாலுவுடன் செல்கிறேன் என்னைத் தேட வேண்டாம் என்ற கடிதம் இருந்தது.
மன வருத்தத்துடன் தன் பையைத் திறந்து பார்த்த வீரகுமார் மேலும் அதிர்ந்தார். அவர் வாங்கி வந்த முத்துமாலையும் காணவில்லை.
வீரகுமார் வாங்கி வந்த முத்துமாலையத் திருடிய பாலு அஞ்சனாவிற்கு திருமணப் பரிசாகக் அதனைக் கொடுத்து மகிழ்ந்தான்.
பாலு தான் திருடினான் என்று வீரகுமாரிடம் யாரும் சொல்லி விடாதீர்கள்...!
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
Folk Song: குடகு மலை தென்றலோடு வா நிலா!
சிந்தனைச் சிதறல்.. நாம் யாரைப் பின் தொடர வேண்டும்?
முத்துமாலை.. ஒரு நிமிடக் கதை (31)
நவராத்திரி ஸ்பெஷல் நெய்வேத்தியம்: நவதானிய சுண்டல்!
தாமோதரன் ஸ்வீட்ஸ்!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி
உள்துறை செயலாளர் உட்பட முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!
எனக்குள் விழுந்த விதை.. Eben Miss-க்கு ஒரு கடிதம் !
{{comments.comment}}