5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

Jun 11, 2025,10:55 AM IST

லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரான லாஸ் ஏஞ்சல்ஸில், ஐந்து நாட்களாகத் தொடரும் கொந்தளிப்பான போராட்டங்களைக் கட்டுப்படுத்த, நகரில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இரவு நேரத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், லாஸ் ஏஞ்சல்ஸை "விடுவிப்பேன்" என்று சூளுரைத்துள்ளார். 


இதற்கிடையே, டிரம்பின் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான அமெரிக்க சீல் கடற்படையினர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். இது தெருக்களில் போராட்டம் நடத்துவோரை மேலும் தூண்டியதுடன், சர்வாதிகாரப் போக்கை எச்சரிக்கும் ஜனநாயகக் கட்சித் தலைவர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசோம், இந்தப் படைக் குவிப்புகள் தேவையற்றவை, சட்டவிரோதமானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று ஆட்சேபனை தெரிவித்த போதிலும், நகரத்தில் போராட்டங்களைக் கட்டுப்படுத்த அதிபர் 4,000 போலீஸாரையும் அனுப்பியுள்ளார்.


சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் டிரம்ப் நடவடிக்கைகளைக் கண்டித்துதான் தற்போது லாஸ் ஏஞ்சலெஸில் கலவரம் நடந்து வருகிறது. பொதுச் சொத்துக்கள் பல சேதப்படுத்தப்பட்டுள்ளன. கடைகள் சூறையாடப்பட்டு வருகின்றன. 




வடக்கு கரோலினாவின் ஃபோர்ட் ப்ராக்-கில் உள்ள ராணுவத் தளத்தில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், பல தலைமுறை ராணுவ வீரர்கள் தங்கள் ரத்தத்தை தொலைதூர நாடுகளில் சிந்தியுள்ளனர். இந்தத் தியாகத்தை சட்டவிரோத குடியேற்றங்கள் நீர்த்துப் போக விடுவதை அனுமதிக்க முடியாது. கலிபோர்னியாவில் நீங்கள் காண்பது, அமைதி, பொது ஒழுங்கு மற்றும் தேசிய ஆளுமை மீது அந்நியக் கொடிகளை ஏந்திய கலவரக்காரர்களால் நிகழ்த்தப்படும் ஒரு முழுமையான தாக்குதல். எனது நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸை விடுவிக்கும்  என்றார் அவர்.


வன்முறைச் சூழலில் சிக்கியுள்ள லாஸ் ஏஞ்சல்ஸுக்கு இன்று முதல் உள்ளூர் அவசரகால ஊரடங்கு அமலுக்கு வரும் என்று மேயர் கரேன் பாஸ் அறிவித்தார். இந்த ஊரடங்கு உள்ளூர் நேரம் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்றும், ஒரு சில நாட்களுக்கு இது நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.


டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை முதல் தொடர் குடியேற்றச் சோதனைகளைத் தொடங்கியதிலிருந்து, நகரில் ஐந்து நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  கைது செய்யப்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் மெக்சிகோ மற்றும் பிற நாடுகளின் கொடிகளை கையில் ஏந்திப் போராடி வருகின்றனர்.


செவ்வாய்க்கிழமை, குடியேற்ற கடுமையான நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களைத் தடுத்து வைக்கும் ஒரு கட்டிடத்தின் அருகே பல நூறு பேர் திரண்டனர். இது பெரும் வன்முறையாக பின்னர் மாறியது. ஆப்பிள் ஸ்டோர் உட்பட பல வணிக நிறுவனங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. போலீஸார்  96 பேரைக் கைது செய்தனர். செவ்வாய்க்கிழமை நியூயார்க்கிலும் குடியேற்றக் கைதுகளுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. மன்ஹாட்டன் வீதிகள் வழியாக பல ஆயிரம் பேர் பேரணியாகச் சென்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்