சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, வரும் 30ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். 3 நாட்கள் தங்கி தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கியது. மொத்தம் 7 கட்டங்களாக இத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 6 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்து விட்டது. கடைசிக் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், வரும் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 நாட்கள் அவர் அங்கு தங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் முடிவு வரப் போகும் நேரத்தில் மோடியின் தமிழக வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வரும் 30ம் தேதி கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். 30,31,1 ஆகிய மூன்று நாட்கள் விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். ஜூன் 1ம் தேதி தியானத்தை முடித்துக்கொண்டு அன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் புறப்படும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 மக்களவை தேர்தலிலும் 7 கட்ட வாக்குப்பதிவு நடந்தது. அதில் கடைசிக் கட்ட வாக்குப் பதிவின்போது உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு சென்று அங்கு தொடர்ந்து 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டிருந்தார் பிரதமர் மோடி என்பது நினைவிருக்கலாம்.
வெளுக்குது வெயிலு.. ஏசி யூஸ் பண்றீங்களா.. அப்ப இதையெல்லாம் மறக்காம பாலோ பண்ணுங்க!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக.. ரோஹித் ஷர்மா திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்?
உங்களுக்கு bp இருக்கா?.. தயவு செய்து இந்த 5 உணவுகளை மறந்தும் எடுத்துக்காதீங்க!
ரெட்ரோ ரூ.100 கோடி வசூல்.. சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு..அமோக வரவேற்பு..!
கதையல்ல நிஜம்.. வளர்ப்புத் தாயும், சைக்கிளும்!
அமைச்சர் ரகுபதியின் சட்டத்துறை.. துரைமுருகனுக்கு கூடுதல் துறையாக ஒதுக்கீடு.. திடீர் இலாகா மாற்றம்
KKR அணி Playoffsக்கு செல்வது ரொம்ப கஷ்டம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் செஞ்ச சம்பவம்!
ஆறுதல் வெற்றியில் தோனி செய்த புதிய சம்பவம்.. பல காலத்திற்கு நின்று பேசப் போகும் சாதனை!
அமிர்தசர் கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கெட்டுகள்.. பாகிஸ்தான் ராணுவம் வீசியதா?