அட இவருக்குள்ள இப்படி ஒரு திறமையா?...கமல் பட பாடலை பாடி அசத்திய பிரியா பிரகாஷ் வாரியர்!

Mar 05, 2024,03:19 PM IST

சென்னை:  கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் குணா. அந்த திரைப்படத்தில் வெளிவந்த 'கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடலை பாடி  பிரியா  பிரகாஷ் வாரியர் தனது இணைய பக்கத்தில் வீடியோ வெளியிட்டு நெட்டிசன்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.


2019ம் ஆண்டு மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் நடித்த படம் ஹிட்  அடித்ததோ இல்லையோ, இவர் கண் அடித்து ஒரே இரவில் ரசிகர்களை கவர்ந்தவர். மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர்.




இவர் நடித்த படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். ஆனால் பிரியா கவர்ந்த அளவிற்கு அந்த படம் ரசிகர்களை கவரவில்லை. இதனால் துரதிஷ்ட வசமாக இவரின் முதல் படமே தோல்வியை தழுவியது. இந்த படம் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டன. என்ன தான் முதல் படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் வாயிலாக சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்ததும் உண்மை தான்.


மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீ தேவியின் பெயரில் நடிகை பிரியா வாரியர் ஒரு படத்தில் நடித்தார். அந்த படத்தின் டீசரும் வெளியாகியது. சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்தது போல் இருந்ததால், ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இந்த காரணத்தினால் இந்த படம் வெளிவராமலேயே நின்று போனது.


அதன் பின்னர் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காததினால் அவ்வப்போது கவர்ச்சி உடையில் போட்டோ சூட் நடத்தி தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வந்தார் பிரியா வாரியார். அப்படித்தான் தற்போது கமல் நடிப்பில் வெளிவந்து ஹிட்  அடித்த படம் தான் குணா. குணா படத்தில் 'கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடலை அழகாக பாடி ரசிகர்களை கிறங்கடித்து லைக்குகளை அள்ளி வருகிறார் பிரியா பிரகாஷ் வாரியார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்