பொதுவாகவே சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவுகள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காகவே நாம் ஃபிரிட்ஜை பயன்படுத்துகிறோம். அதில் எதை வைக்க வேண்டும். எதை வைக்கக்கூடாது என்ற விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் எல்லா பொருட்களையும் ஃப்ரிட்ஜுக்குள் வைத்து உண்டு வரும் நடைமுறைக்கு மாறி வருகின்றனர்.
நாம் எதையும் வீணாக்க கூடாது சிக்கனமாக இருப்பதே சிறந்தது என்ற பெயரில் மீந்து போன சாம்பார் குழம்பு பொரியல், ரசம் என குப்பையில் கொட்ட வேண்டிய அனைத்தையும் நம் வயிறு என்னும் குப்பைத் தொட்டிக்குள் கொட்டுகிறோம். அதுதான் உண்மை. நம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா.. மீந்துபோன உணவுகள் மற்றும் கெட்டுப்போன உணவுகளை போட்டு விட்டு,நமக்கு எதுவும் ஆகாது என்று நினைப்பதற்கு.

சரி நம் ஃப்ரிட்ஜின் சீதோசன நிலை எப்படி இருக்கும் என்று அறிந்ததுண்டா. ஏனென்றால் வைக்கப்பட்ட உணவுகள் ஃப்ரிட்ஜில் கெட்டுப் போகாமல் இருக்க அதன் சீதோசன நிலை சரியான விகிதத்தில் இருக்கிறதா என்பதை அவ்வப்போது அறிய வேண்டும். இல்லையென்றால் அதில் வைக்கப்பட்ட உணவுகள் கெட்டுப்போய் அவற்றை சரியாக சமைக்காமல் நாம் சாப்பிடும் போது அவை நம் உடம்பில் தொற்று நோய்களை ஏற்படுத்தும். அதே சமயத்தில் எல்லா நேரங்களிலும் ஃப்ரிட்ஜின் சரியான சீதோசன நிலையை கண்டறிந்து கொண்டே இருக்கவும் முடியாது.
நாம் பிரிட்ஜுக்குள் என்னென்ன உணவுகளை வைத்து உண்ண வேண்டும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காய் பழங்கள் என சமைக்கப்படாத உணவுகளை ஒருநாள் இரண்டு நாள் வரை பிரிட்ஜில் வைத்து அதனை சமைத்து உட்கொள்ளலாம். அதேசமயம், நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி, சிக்கன், போன்ற அசைவ உணவுகளை உண்ணக்கூடாது.
நீண்ட நாட்கள் அசைவ உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து உண்ணும் போது அதில் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும். அதனை நாம் சமைத்து சாப்பிடுவதால் நம் உடலில் பலவித தொற்று நோய்களையும் ஏற்படுத்தும். அது உடல் நலனுக்கு தீங்காக அமையும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சமைத்த அசைவ உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் மீண்டும் சூடேற்றி சாப்பிடும் போது அதன் தன்மை மாறி விஷ உணவாகவும் மாற வாய்ப்புண்டு எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது உடல் நலனுக்கு நல்லது.

ஃபிரிட்ஜில் அசைவ உணவுகளை வைத்து சாப்பிடும் போது என்ன மாதிரியான நோய்த்தொற்று ஏற்படும் என்பது தெரியுமா? நீண்ட நாட்களாக அசைவ உணவுகளை பதப்படுத்தி சாப்பிடும் போது யூ டி ஐ என்ற சிறுநீர் தொற்று ஏற்படுமாம். அதாவது இதனை யூரினரி இன்பெக்சன் எனக் கூறுவர்.
அது மட்டுமல்லாமல் இரைப்பை, ஈரல், சிறுநீரகம், மூளை ஆகியவற்றின் செயல்பாடுகளையும் இழக்கச் செய்யுமாம்.. இதனால் மக்கள் முடிந்த அளவு சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் மற்றும் மீந்து போன உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உங்களைக் கொண்டாடுபவர்களுடன் இருங்கள்.. Stay where you are celebrated!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
மகாராஷ்டிரா துணை முதல்வராக சுனேத்ரா பவார் இன்று மாலை பதவியேற்பு
உங்கள் மனதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.. Guard your mind
பொங்கிப் பெருகும் உணர்வுகள்.. துள்ளிக் குதிக்கும் உற்சாகம்.. Emotions in every way!
Bollywood is Back: பாலிவுட்டின் பிரம்மாண்ட எழுச்சி.. வசூல் வேட்டையில் பார்டர் 2 மற்றும் துரந்தர்!
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
{{comments.comment}}