சென்னை: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொது விடுமுறை விடப்படுவதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் அது உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது. அதேசமயம், அரசு விடுமுறை விடுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு எழுந்துள்ளது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அக்., 1, 2 ஆகிய இரண்டு தினங்களுக்கு அரசு விடுமுறை தினங்களாகும். அதன்பின்னர் அக்.,4,5 ஆகிய இரண்டு தினங்களும் சனி மற்றும் ஞாயிறு, இந்நாட்களும் விடுமுறை என்பதால், இடையில் இருந்த 3ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருக்கிறது.

அக்டோபர் 3ம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறையாக அரசு அறிவித்தால் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் சூழ்நிலை நிலவும். இந்த தொடர் விடுமுறை காரணமாக தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவர்கள் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அதில் உண்மை இல்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் அரசு அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவுகிறது.
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நட்பு
மகர விளக்கு பூஜைக்காக.. சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு
கள்ளக்குறிச்சி பூங்காவில் களை கட்டும் கூட்டம்.. படகு சவாரி, நீச்சல் குளம்.. கொண்டாட்டம்!
எப்பப் பார்த்தாலும் உப்புமாதானா.. அப்படின்னு கேட்பவர்களுக்காக.. ஸ்பெஷல் கோதுமை ரவா பொங்கல்!
ராத்திரியானா சவுண்டு ஜாஸ்தியா இருக்கா.. குறட்டையை நிறுத்தும் இயற்கை வைத்தியம்!
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
ஆருத்ரா தரிசனம் எப்ப வருது தெரியுமா.. அதோட முக்கியத்துவம் என்னன்னு தெரியுமா?
{{comments.comment}}