Exclusive: புதுமையான பட்டாசு.. படபடன்னு வெடிக்கும்.. வெடிச்சதும் விஜய் உருவம் வரும்.. சபாஷ் சபாபதி!

Jan 15, 2025,01:35 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த பட்டாசு தொழிற்சாலை அதிபர் ஒருவர் வித்தியாசமான பட்டாசைக் தயாரித்துள்ளார். அந்தப் பட்டாசு மேலே போய் வெடித்ததும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய்யின் உருவம் தெரியுமாம். இந்தப் பட்டாசை விஜய்யை சந்தித்து அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார் பட்டாசு ஆலை அதிபரான சபாபதி.


நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதை லிஸ்ட் போட்டால் அது நீண்டு கொண்டே போகும். அந்த அளவுக்கு ஆறு முதல் 60 வயதைத் தாண்டியவர்களும் கூட பலர் விஜய்யின் ரசிகர்களாக உள்ளனர் என்பது உலகம் அறிந்த ஒன்று. அதேபோல இந்தத் துறை அந்தத் துறை என்றில்லாமல் எல்லாத் துறைகளிலும் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர்.




தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினே கூட ஒரு டிவி பேட்டியில் முன்பு கூறுகையில், எனக்குப் பிடித்த நடிகர் விஜய் என்று கூறியிருந்தார். அதேபோலத்தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் கூட விஜய்யின் ரசிகர்தான். அப்படிப்பட்ட புதுச்சேரியில்தான் சபாபதி என்ற பட்டாசு நிறுவன அதிபர், வித்தியாசமான பட்டாசை உருவாக்கியுள்ளார்.


சபாபதி அடிப்படையில் விஜய்யின் ரசிகர். இதனால் வித்தியாசமான பட்டாசை, விஜய்க்கு சமர்ப்பிப்பது போல செய்ய நினைத்தார். அதில் உருவானதுதான் இந்த நூதன பட்டாசு. பார்க்க கோகோ கோலா டப்பா போல இருக்கிறது. அதில் மேலே திரி இருக்கிறது. டப்பாவைச் சுற்றிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் விஜய் படத்தை வடிவமைத்துள்ளனர். பட்டாசின் திரியை பற்ற வைத்ததும் அது வெடித்துச் சிதறும்போது விஜய்யின் உருவம் தெரியுமாம்.


இந்தப் பட்டாசை விஜய்யிடம் காட்டி அவரை வைத்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளாராம் சபாபதி. இதுதொடர்பாக தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தையும் நேரில் சந்தித்து அவரிடம் காட்டியுள்ளார் சபாபதி. அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட புஸ்ஸி ஆனந்த், விஜய்யை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளாராம்.


இதுகுறித்து சபாபதியிடம் தென்தமிழ் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஏதாவது செய்யனும்னு யோசிச்சோம். அதான் இதை செஞ்சோம். நாங்க பட்டாசு பேக்டரி வைத்துள்ளோம். 




பட்டாசை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. விஜய்யை நேரில் பார்த்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். புஸ்ஸி ஆனந்த் அண்ணனிடம் சொல்லியுள்ளோம். அவர் சொல்வார். பிறகு பார்ப்போம்.


விஜய்யின் தீவிர ரசிகர் நான். 30 வருடமாக பட்டாசுத் தொழிலில் இருக்கிறோம். என் பெயரில் லைசன்ஸ் வாங்கி 16 வருடமாகிறது. அப்பா, மாமா, எல்லோரும் வாணக்காரர்கள் என்றார் சபாபதி.


புகைப்படங்கள்: சபாபதி, புதுச்சேரி


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக.,வை எதிர்த்ததாலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்...அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு

news

ஜெம் வீரமணி மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு தகவல்

news

ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது

news

இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்

news

மெந்திய மசியலும் வாழைக்காய் கொழுக்கட்டையும்!

news

House Husband-களும் இருக்க முடியும்! குடும்ப அமைப்பைப் பாதுகாக்க மதுரை ஐகோர்ட் கிளை கருத்து

news

நம்மை உடைப்பவர்கள் நம்மை செதுக்கியவர்களே..!

news

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை

news

தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்