புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை

Mar 21, 2026,05:15 PM IST

புதுச்சேரி: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், அந்த ஆட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கும் என்றும் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டி :


புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 09ம் தேதி நடைபெற உள்ளது. இதில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்துள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தல் பாஜக 10, என்ஆர் காங்கிரஸ் 16, அதிமுக 2, லஜக 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு கையெழுத்தானதை தொடர்ந்து புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்பழகன், தொகுதிப் பங்கீடு மற்றும் கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்தார். அவர் கூறியதாவது, "புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் கட்சியின் வெற்றிக்காகத் தொண்டர்கள் இப்போதே களப்பணியைத் தொடங்கிவிட்டனர்."


கூட்டணி தர்மத்திற்காக விட்டுக்கொடுத்த அதிமுக :




தொகுதிப் பங்கீடு குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "கூட்டணி தர்மத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவும், ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தவும் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் இந்த 2 தொகுதிகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். எண்ணிக்கையை விட, கூட்டணியின் வெற்றியே எங்களுக்கு முக்கியம்," என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.


அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் :


தேர்தலுக்குப் பிந்தைய சூழல் குறித்துப் பேசிய அன்பழகன், புதுச்சேரியில் அமையும் அடுத்த ஆட்சியில் அதிமுகவின் பங்கு தவிர்க்க முடியாததாக இருக்கும் என்பதை உறுதிபடக் கூறினார். புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் அதிமுக உரிய பங்கைக் கேட்கும். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அமையவுள்ள புதிய அமைச்சரவையில் அதிமுக அமைச்சர்கள் இடம்பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார்.


தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி :


தற்போதைய அரசியல் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என அவர் நம்பிக்கை தெரிவித்தார். முந்தைய காலங்களில் நிலவிய சில அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு வலுவான கூட்டணி ஆட்சியை மக்களுக்கு வழங்க அதிமுக பாடுபடும் என்றும் அவர் கூறினார்.இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர். 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அன்பழகனின் இந்த அறிவிப்பு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்