ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

Oct 06, 2026,10:29 AM IST

- ராதா ஜானகிராம், வீரசிகாமணி


ஸ்வீட் மச்சான்..  என்னங்க தலைப்பு பார்த்து ஷாக் ஆகிட்டீங்களா?  நானுந்தானுங்க. கடந்த 2 நாட்களாக தொலைக்காட்சி news channels இந்த நம்ம ஸ்வீட் மச்சான் பற்றிய செய்தி தானுங்க. 


கேப்டன் ஸ்மித் மச்சார் – (என் காதில் "ஸ்வீட் மச்சான்"  என கேட்டிருக்கிறது)  கேப்டன் ஸ்மித் மச்சார் குறித்து நான் சேகரித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். 182 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி. Real hero. 

சிலநேரங்களில் விமானத்தை ஓட்டுவது என்பது வெறும் தொழில் அல்ல… நூற்றுக்கணக்கான உயிர்களின் பொறுப்பையும் சுமக்க வேண்டிய பணி.


அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான தருணத்தில் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், விமானத்தில் இருந்த பயணிகளின் உயிரைக் காப்பாற்ற போராடிய இந்திய விமானி தான் கேப்டன் ஸ்மித் மச்சார்.


2026 செப்டம்பர் 30 அன்று, துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற Flydubai FZ1073 விமானத்தில் 182 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, துணை விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை தாக்கியதாகவும், அவர் காயமடைந்ததாகவும் விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




விமானம் திடீரென சுமார் 14,000 அடி உயரம் வரை வேகமாகக் கீழிறங்கியது. படுகாயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் போராடி, காக்பிட் கதவைத் திறக்க முடிந்தது. அதன் மூலம் பயணிகளும் விமானக் குழுவினரும் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்த முடிந்தது.


பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த ஓய்வில் இருந்த இரண்டு Flydubai விமானிகள் தரையிறக்குவதற்கு உதவினர்.


ஸ்மித் மச்சாரின் வாழ்க்கைப் பயணமும் சுவாரஸ்யமானது.


விமானி ஆக வேண்டும் என்பது அவரது சிறுவயது கனவு அல்ல. முதலில் குடும்பத்தின் ஜவுளித் தொழிலில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் Textile Engineering படித்தார். பின்னர் மும்பையின் Welingkar Institute-ல் மேலாண்மை படித்தார்.


அப்போது நடைபெற்ற ஒரு Aviation Seminar அவரது வாழ்க்கையையே மாற்றியது. சுமார் 19 வயதில் விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்ட ஆர்வம், அவரை நியூசிலாந்தில் விமானப் பயிற்சி பெறச் செய்தது.


பின்னர் 2011-ல் SpiceJet நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, Senior Commander மற்றும் Line Training Captain உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். அவருக்கு சுமார் 9,750 மணி நேர விமான அனுபவம் இருப்பதாக அவரது தொழில்சார் தகவல்கள் தெரிவிக்கின்றன.


2022-ல் Flydubai நிறுவனத்தில் Captain ஆக இணைந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவரது துணிச்சலும் துரிதமான முடிவெடுக்கும் திறனும் பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளன.


தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார். இந்திய தூதரக அதிகாரிகள் அவர் நிலையான நிலையில் இருப்பதாகவும், உடல்நிலை முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு விமானியின் திறமை என்பது விமானத்தைச் சரியாக இயக்குவதில் மட்டும் இல்லை. ஆபத்து நேரத்தில் பயப்படாமல் முடிவெடுப்பதும், தன்னுடன் பயணிக்கும் ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்கப் போராடுவதும் ஒரு உண்மையான விமானியின் மிகப்பெரிய பொறுப்பு.


கேப்டன் ஸ்மித் மச்சாரின் இந்தச் சம்பவம், அந்தப் பொறுப்பின் அர்த்தத்தை உலகிற்கு உணர்த்திய ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது.


ஸ்மித் மச்சார், குஜராத் மாநிலத்தவர் . திருமணமானவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. குஜராத் அரசு இவரை பாராட்டி 25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. நமது பிரதமர் மோடியும், கேப்டனுடன் தொலைபேசியில் பாராட்டி உடல்நிலை குறித்து கேட்டுள்ளார். மற்றும் உலகத் தலைவர்கள் எல்லாம் ஸ்மித் மச்சார் வீர தீர செயலைப் பாராட்டி உள்ளனர்.


"இந்தியன் " டா என பெருமை கொள்வோம்.


(கட்டுரையாளர் ராதா ஜானகிராம், B.A. தீவிர சிவபக்தை. திருமுறைகள் மற்றும் திருவாசகத்தின் மீது தனிப்பட்ட ஆர்வம் உண்டு. திருவாசகம் முற்றோதல் நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். கையிலை அறக்கட்டளை நடத்தும் “சைவ சித்தாந்தச் சுடர்” வகுப்பில் கலந்து கொண்டு பட்டம் பெற்றுள்ளார். சைவ சமயம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறேன். ஜெயசுகந்தி அவர்கள் நடத்தும் "அருள் சக்தி ஆலயம்" குழுவில் பயணிக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!

news

சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!

news

நெருப்பும் நீரும்!

news

ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

news

மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்