டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். பாகிஸ்தான் ராணுவ ட்ரோன் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் திடீர் என கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், அப்பகுதிக்கு சுற்றுலா சென்ற 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

மேலும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் முகாமிட்டிருந்த ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதன்பிறகு, எல்லைக்கோடு அருகே உள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்து அழித்தனர். இதில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுத்ததாக ராணுவம் பெருமிதத்துடன் அறிவித்தது.
இதனால், அப்பகுதிகளில் போர் பதற்ற சூழ்நிலை உச்சகட்டத்தை எட்டி இருந்தது. தொடர்ந்து 4 நாட்களாக குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உறைந்தனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இராணுவப் படையினர் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் சமரச பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. இரு நாடுகளும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன. இதனால் இரு நாடுகளின் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பாகிஸ்தான் ராணுவ டிரோன் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதற்கு முன்னர் ஸ்ரீநகர் சென்ற ராகுல்காந்தி, பஹல்காம் தாக்குதலில் இறந்தோருக்கு ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு- காஷ்மீருக்கு ராகுல் காந்தி செல்வது இது இரண்டாவது முறையாகும்.
மறக்கக் கூடாத நம்மாழ்வார்.. இயற்கை வேளாண்மையைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்!
ச்சும்மா.. சோம்பேறித்தனம்!
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு
Bangladesh in Tears: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் காலிதா ஜியா காலமானார்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 30, 2025... இன்று மோட்சம் தரும் வைகுண்ட ஏகாதசி
பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்
திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
{{comments.comment}}