- அ.சீ. லாவண்யா
சென்னை: மழைக்கால நினைவுகள் யாருக்குத்தான் இருக்காது. எனக்கும் உண்டு.. அதையெல்லாம் இப்போது சடசடவென உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.. வாங்க நீங்களும் என்ஜாய் பண்ணுங்க கேட்டு!
மழை வந்தாலே மனது நனைந்திடும்...
நமது 90ஸ் கிட் குழந்தை மனசு அந்த மண்வாசனையிலே போய் மறைந்திடும்...
வீட்டின் மாடிப்படி, தட்டிய குடம், அதில் விழும் மழைத்துளி டக்-டக் சத்தம்
மின்சாரம் போனால் தெரியும் மழையின் அருமை,
நெருப்புக் கம்பியைக் கொண்டு வரிசை போட்ட விளையாட்டு, கையில் குடம்,
குடும்பத்தோடு இணைத்து மகிழ்ந்து கழித்த
அந்த நாட்கள் இனிமையோ இனிமை!
90'ஸ் கிட்ஸ் கால மழை

மழையை வர்ணிக்க நிறைய காலங்கள் இருக்கின்றது. ஆனால் அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த 90ஸ் கிட் - ன் மழை காலமே வேற லெவல்தான்.
அப்போதெல்லாம் மழை பெய்தால் நம் மனதில் முதல் தோன்றுவது பள்ளி கல்லூரிகள் விடுமுறையா என்று டிவி பெட்டி முன் நின்று அந்த ம(ழை)கிழ்ச்சியான செய்திக்காக காத்திருக்கும் நிமிடங்கள். விடுமுறை என்று அறிவித்தவுடன் ஆட்டம் பாட்டம் தான்..
மழைக்காலங்களில் அம்ம ஆவி பறக்க செய்து தரும் போண்டா, பஜ்ஜி, சூடான மூக்கைத் துளைக்கும் கமகம டீ,க்கு நானெல்லாம் அடிமையே... நம் வீட்டு முற்றங்களில் தேங்கி மழை நீரில் காகித கப்பல் விட்ட காலம் அதுவே....மழையில் இறங்கி விளையாடிய பொன்னான காலம்... பிறகு அந்த நீரில் ஓடை ஆறுகளில் இருந்து நீந்தி வரும் மீன்களை பிடித்து விளையாடிய காலம்..... மொட்டை மாடிகளில் டென்ட் கட்டி விளையாடிய காலம்...
நனையாதே என்று அம்மா கண்டிப்பாக கூப்பிட்ட குரலும், அதை மீறி நனைந்த நாங்களும்-"மழைனா தான் ஜாலி!" என்று ஓடி மழையில் ஆடிய குழந்தைகள் நாம்தானே... இப்போது பெரியவர்கள் ஆனாலும், ஒரு மழைத்துளி விழும் போதும் அந்த 90ஸ் கிட் உள்ளே இன்னும் ஓடிகொண்டேதான் இருக்கிறது....
ஒரே வரியில் சொல்ல சொன்னால்...
90's kids க்கு மழை என்றாலே-மழை மட்டும் அல்ல... ஒரு வாழ்க்கை நினைவுகளின் பெரிய புத்தகமும் கூட.
(அ.சீ. லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}