- சிவ.ஆ.மலர்விழி ராஜா
கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கியது. மனதிற்குள் ஆனந்தமும் அலைமோதும்.
சின்னஞ்சிறு வயது சிட்டு போல் ஆடினோம். மழைக்காலம் மனதில் சுகம் தரும் நேரம். பெற்றவர்களின் கஷ்டம் தெரியாமல் இஷ்டம் போல் ஆடினோம் .
ஓடும் நீரில்
கால் பதித்து
சின்ன சின்ன கனவுகளை.......
அச்சமின்றி நனவாக்கி பட்டாம்பூச்சி போல் பறந்த காலம் அது.
அடுத்து வரும் வெள்ளத்தில் தெருவின் வாசலில் சட்டென தோன்றும் அழகான நீரோடை . ஆனந்த வெள்ளமோ நம்ம மனதில். காற்றும் மழையும் கடுமையாக வந்தாலும் சின்னஞ்சிறு கப்பல் செய்து ஒன்றன்பின் ஒன்றாக ஓடவிட்டு ரசித்து மகிழ்ந்த காலம் அது.
அது மட்டும் போதுமா...... ?

அம்மா செய்து தரும் சுவையான பலவிதமான சூடான உணவுகள்...... வெளியில் மழை உள்ளே வடை.... அடை.... பஜ்ஜி...... முறுக்கு .... எனபலவிதமான..... மழைக்கு இதமாக பலகார வகைகளை சுவைத்து மகிழ்ந்து ஆனந்தமாக மழைக்காலத்தை அனுபவித்த நாட்கள்.
அது மட்டுமா...... ?
மின்னல் என்றால் பயம். இடி என்றால் கேட்க வேண்டுமா...... ? உடன் பிறந்தவர்களின் கதகதப்பில் ஒரே படுக்கையில் கவலைகள் ஏதுமின்றி....... கதை பேசிய காலம் அது.
ஓடாதே..... ! ஆடாதே......!! பெரியவர்கள் சொல் கூட சலிப்புதான். பின்பு வரும் வலிப்பு தான் தாங்க முடியாது.
வழுூக்கி விடும் தரை கூட ஸ்கேட்டிங் செய்யும் பயிற்சி போல......! மகிழ்ச்சியாக ஓடி ....ஆடி..... கீழே விழும் போது மேலே..... மேலே ......விழும் அடி தான்.
அது மட்டுமா..... ?
பள்ளிக்கு செல்லும் நேரம் மழை வந்தால் பேரின்பம்...... மழையின் கடுமை தாங்காமல் அடுத்து வரும் அறிவிப்பு......
இன்று பள்ளி விடுமுறை......
ஆஹா.........
வென்று மகிழ்ச்சி
வெள்ளம் அடித்து வர
அடுத்த நாளும் விடுமுறை...... மழை என்றால் மகிழ்ந்து ஆடிய காலம்.
ஆனந்த வாழ்வே மழைக்காலம் என வாழ்ந்த நாட்கள் ....
மறக்க முடியாத மழைக்கால நாட்கள்...... !!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}