சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலஙகள், ரசிகர்கள் யுனணரு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி
ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!
ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
நடிகர் ரஜினிகாந்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்த நாள் காணும் ரஜினிகாந்தை அலைபேசியில் தொடர்புகொண்டு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
நடிகர் கமல்

75 ஆண்டுகள் சிறப்பான வாழ்க்கை, 50 ஆண்டுகள் புகழ்பெற்ற சினிமா என குறிப்பிட்டு, நடிகர் ரஜினிகாந்துக்கு, மக்கள் நீதி மய்ய தலைவரும், எம்.பியும், நடிகருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
இன்று 75 ஆவது பிறந்த நாள் கொண்டாடும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், ஐம்பது ஆண்டுகளாக, இந்தியத் திரையுலகின் உச்சத்தில் இருப்பவர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, மூன்று தலைமுறைகளை தனது வசீகரத்தால் ஈர்த்திருப்பவர்.
சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், மேலும் பல்லாண்டுகள் நலமுடன், ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி
பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்துக்கு, பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடன், நூறாண்டு வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
The Strength of Transplanted Roots
பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
பெண்களை அச்சுறுத்தும் ‘முடக்கு வாதம்’: அறிகுறிகளும், கண்டறியும் வழிகளும்!
“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?
புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு
தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
Sasikala Viswanathan Short story: விந்தை
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்
{{comments.comment}}