"அவ அவங்க அப்பா மாதிரி".. அப்பா!

Oct 07, 2026,10:22 AM IST

- ரஜிதா.டி


"அடிச்சுட்டு வந்துரு, பாத்துக்கலாம், அடிவாங்கிட்டு மட்டும் வந்துராத” அப்பா அடிக்கடி சொல்லும் தாரக மந்திரம்.


"அவ அவங்க அப்பா மாதிரி சட்டுனு கோவம் வந்துரும்", அம்மா அடுத்தவரிடம் கூறி அடிக்கடிக் கேட்டதுண்டு.


சென்ற வாரம் தங்கை சொன்னாள் "அப்பா என் கனவுல வந்தாங்க" என்று.


 “அப்படியா! என் கனவில் ஏன் அப்பா வருவதேயில்லை?" - இது நான்.


அன்று


கோபம்,பிடிவாதம், துணிவு = அப்பா


நேற்று


கோபம், பிடிவாதம்,துணிவு = அப்பா+நான் 


இன்று




நான் மட்டும்.


அப்பாவிடமே சண்டையிட்டு கோபப்பட்டு பேசாமல் இருந்த காலம் உண்டு. "ஏம்ப்பா, என் கனவுல வரல?" அதே கோபத்தோடு இன்றும்.


நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்.. மடத்தனத்தின் உச்சாணி கொம்பில் நின்று மார் தட்டியதுண்டு. எதிர்த்தவரை ஏளனம் செய்து - என்னையே ஏமாற்றிக் கொண்டதும் உண்டு.


எண்ணங்கள் தடம் மாற

வண்ணங்கள் இடம் மாற 

கண்கள் கன்னங்களில் கவி பாட

கலவையாய் பிம்பங்கள்.


மூளையில் மின்னல் வெட்டி மூக்கு நுனி சிவப்பது எதனால்? அப்பாவால்.


வேகமாய் படபடக்கும் நெஞ்சுக்குள் வெந்நீராய் பாயும் செந்நீர் யார்? 


அப்பா.


எதிர்த்து நிற்பவர் எவராயினும் எரித்துப் பார்க்கும் கண்கள் தந்தது?


 அப்பா.


என் சொந்த காலில் நான்...


எழுத்து நிற்கச் செய்தது யார்?


அப்பா....

என் அப்பா.


என்னுள்ளே அப்பா இருக்கும்போது

என் கனவில் ஏன் நீங்கள்

வரப்போகிறீர்கள் அப்பா?


நான் கனவல்ல..., உங்கள் நிஜம்.


கடைசியாய் ஒன்று. 

 நித்திரை கலைத்த சித்திரையில்

 பத்தாண்டுகள் புத்தாண்டு எமக்கில்லை அப்பா.


வாழ்க்கை போர்க்களத்தில் அடிவாங்காமல் இருக்க முடிவதில்லை.

 வாங்கிய அடியை திருப்பிக் கொடுக்காமல் ஒருநாளும் வீடு வந்து சேர்ந்ததில்லை.


ஆனால் 

பார்த்துக் கொள்ள மட்டும் நீங்கள் இல்லை...... அப்பா.


-ரஜிதா தர்மலிங்கம்.


(ரஜிதா டி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, படப்பை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tuesday Thoughts: பெண்களோட கம்பீரம் எப்படி இருக்கணும் தெரியுமா?

news

டெல்லியில் பரபரப்பு: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

போவோமா.. ஊர் கோலம்.. ஒரு நிமிடக் கதை (29)

news

"அவ அவங்க அப்பா மாதிரி".. அப்பா!

news

தென்தமிழ் தலையங்கம்: ஜனநாயகத்தின் மூச்சுக்காற்று.. கேட்டால்தான் தருவதா அரசாங்கம்?

news

அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

news

செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்