தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு விவகாரம்.. காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள்!

Aug 02, 2024,06:31 PM IST

ராமேஸ்வரம்:   இலங்கை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் உடலை தமிழ்நாடு கொண்டு வரும் வரை போராட்டம் தொடரும் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.


ராமேஸ்வரத்தில் இருந்து 2000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 31ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 400 விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். இலங்கை கடற்படையினரை கண்டது தமிழக மீனவர்கள் விசைபடகுகளை கரைக்கு வேகமாக திருப்பியுள்ளனர். அப்போது,  மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து  துரத்தி வந்துள்ளனர்.


இதில், கார்த்திகேயன் என்பவரது படகு மீது இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில், கார்த்திகேயனின் படகு நடுக்கடலில் மூழ்கியது. கார்த்திகேயன் படகில் சென்ற 4 பேரில். மலைச்சாமி என்பவர் கடலில் மூழ்கி இறந்துள்ளார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாயமான ராமச்சந்திரனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று தொடர்ந்து 5 மணி நேரம் நீதி கேட்ட போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில், இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்தது.


இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலுக்கு, தமிழக மீனவர்கள் உயிரிழந்து இருப்பதாக மத்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்தது. டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிளை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், உயிர் இழந்த மீனவர் மற்றும் காயம் அடைந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யவும் அறிவுறுத்தல் செய்துள்ளது.


இந்நிலையில், இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த மீனவரின் உடலை ராமேஸ்வரம் கொண்டு வரும் வரை போராட்டம் தொடரும் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் தமிழக மீனவர்களைக் கைது செய்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையினரையும் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் எனவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்த முடிவு ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்

news

எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி

news

எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்

news

ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி

news

போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறை ஊழியர்கள் தபால் ஓட்டு போடலாம்

news

கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

news

20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

news

புதுச்சேரி கூட்டணி விவகாரம்...டில்லியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை

news

ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்