முட்களுக்கு நன்றி.. முன் எறிந்த கற்களுக்கும் நன்றி!

Jul 27, 2026,04:08 PM IST

- கவிப்புயல் ரவி அமிர்தன், கனடா


முட்களுக்கு நன்றி

முன் எறிந்த கற்களுக்கும் நன்றி 

பார்த்து பழித்த பற்களுக்கும் நன்றி 

பாரா முகங்களும் நன்றி 


முட்களிலே மலரவும்  

கற்களால் அணை கட்டவும் 

பற்களுக்கு பதிலிருக்கவும்  

பாரா முகங்களை பார்க்க வைக்கவும் செய்தீர் .....


எத்திக்கும் தமிழ் கூவ 

இத்தினத்தில் ஒரு சங்கல்பம் 

சித்தமுள்ளவர் சேரட்டும் 

சத்தமிடுபவர்  மறையட்டும் 




கவிகளின்  நாதம் 

புவி மண்டலத்தை பிளக்கும் 

செவிகள் அதிரும் 

செந்தமிழ் கவி முழங்கும் 


கவி மட்டும் புனைந்து 

ரவி அமிர்தன் வருவேன்  தவிக்கின்ற மனங்களில் 

தமிழ் கொண்டு வருவேன் 

   

சிரிப்பவர் நிழலை

எரித்திடும் கவிதை 

பூரிப்பவர் மனதில் 

புன்னகைக்கும் கவிதை !!!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

news

தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!

news

மாசிலா மனிதராய் வெற்றித்தடம் பதித்த புனிதர்.. அப்துல் கலாம்!

news

முட்களுக்கு நன்றி.. முன் எறிந்த கற்களுக்கும் நன்றி!

news

பொறாமையாய் இருக்கிறது பெண்ணே!

news

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்