சென்னை: முடி திருத்தும் தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்காக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து உள்ளேன். அந்த நிகழ்ச்சியில் நலிவடைந்த முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய இருக்கிறேன் என்று நடிகர் ரோபோ சங்கர் பெருமையாக கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முடி திருத்தும் கதை களத்தில் ரோபோ சங்கர் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக வரும் ஆர்ஜே பாலாஜிக்கு சகலையாக இதில் ரோபோ சங்கர் நடித்திருப்பார். முடி திருத்தகம் வைக்கத் துடிக்கும் சகலைக்கு சகல வழிகளிலும் உதவியாக, உறுதுணையாக இருப்பார் ரோபா சங்கர். அவரது கேரக்டரும் வெகுவாகப் பேசப்பட்டது.
இப்படத்தைப் பார்த்த முடி திருத்தும் தொழிலாளர்கள் அவரை நேரில் சந்திக்க ஆசைப்பட்டு உள்ளனர். இதனை அறிந்த ரோபோ சங்கர் தன்னை சந்திக்க ஆசைப்பட்ட தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் தானே நேரில் சென்று அவர்களைப் பார்த்தார். அவர்கள் வேலை செய்யும் சலூனிற்கு சென்று அவர்களை பாராட்டி, ஊக்கத்தொகையும் வழங்கி உள்ளார்.
பின்னர் நடிகர் ரோபோ சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

படிச்சத் தொழிலை விட, புடிச்சத் தொழில் செய்வதுதான் நல்லது என்ற மூலக்கருத்தை முன்னிருத்தி, சிங்கப்பூர் சலூன் திரைப்படம் எடுக்கப்பட்டது. அந்த திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை பார்த்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர் பலரும், முடிதிருத்தும் தொழிலாளர்களை இந்த சமூகம் இழிவாகப் பார்க்கும் நிலையில், சிங்கப்பூர் சலூன் படத்தில் தங்கள் சமூகத் தொழிலை உயர்வாகக் காட்டி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அந்தப் படம் தேசிய விருதை பெறும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும் என்னிடம் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், முடி திருத்தும் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக, சங்கராபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அந்த நிகழ்ச்சியில், இப்பகுதியில் உள்ள நலிவடைந்த முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் சலூன் படம்:

விஜய் சேதுபதி, ரோபோ சங்கர், பசுபதி உள்ளிட்டோரின் கலக்கலான நடிப்பில் உருவான, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல்தான், சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி முடி திருத்தும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இப்படத்திற்காக ஒன்றை மாதமாக முடித்திருத்தும் பணியை கற்றுக் கொண்டாராம் பாலாஜி. மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், லால், ஜான் விஜய், ரோபோ சங்கர் மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர்.
தன் வாழ்க்கையில் தனக்கு விருப்பமான வேலையில் முன்னேற துடிக்கும் இளைஞனின் கதை. தென்காசியில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து தனக்கு விருப்பமான ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக என்னவெல்லாம் துன்பத்தை சந்திக்கிறார் பாலாஜி என்பதே இப்படத்தின் மையக்கதையாகும்.
ஜனவரி 25 ஆம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}