Short Story: குறுக்கே வராதீர்

Jul 14, 2026,04:56 PM IST

- சசிகலா விஸ்வநாதன்

 

"ஏங்க, நாமே இதை செய்யவில்லை என்றால், வேறு யார்தான் செய்வார்கள்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்". பிரேமா அவனிடம் வாதாட ஒரு முறைப்புதான் அவனுடைய பதிலாயிருக்க; அவள் , " இதை கேளுங்க! இதை நான் பார்த்துக்கிறேன்; நீங்க ஊடாலே வராதீங்க. சொல்லி விட்டேன்". என்று கறாராகச்  சொன்னாள் ராம் தன் கோபத்தை பைக்கை உதைப்பதில் காண்பித்ததை கவனித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளே போனாள்.


"‌பெற்ற அப்பாவைக் கூட்டி வந்து ஒரு கண் ஆபரேஷன் செய்யக்கூட சடவா;என்று சலித்துக் கொண்டே உள்ளே போனாள்,பிரேமா.


ஆயிரம் செலவிருக்கு, எனக்கு, இங்கு. இவள் மாமனாரை கூட்டி வந்து சீராட நினைக்கிறாள்; என்று மனைவியை மனதிற்குள் நொந்து கொண்டே போனதில், எதிரே வந்த பழ வண்டி பெரியவரை கவனிக்கத் தவறிவிட்டான். 




கீழே விழுந்த பெரியவர், " ஏம்ப்பா! ஊடாலே வந்தே? கண்ணு தெரியாம நான் , தட்டுத் தடுமாறி பொழப்பை எம்மட்டோ பார்த்திட்டு இருக்கேன். உபகாரம் பண்ணலைனாலும், ஊடாலே வந்து உபத்திரவம் பண்ணதான் ஆளுங்க வரீங்க." என்றதும்; அவனுக்கு, "சொரேல்" என மனதில் உறைத்தது.


" ஐயா! மன்னிச்சுருங்க"  என்று அவரை சமாதானப் படுத்திய கையோடு, பிரேமாவிற்கு குறுஞ் செய்தி ஒன்று அனுப்பினான்;


"சரி! இந்த வாரம் குடியாத்தம் போய் அப்பாவை அழைத்து வருகிறேன்"


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்