- சசிகலா விஸ்வநாதன்
"அம்மா! இன்றுதான் கடைசி நாள்; பள்ளியில் யூனிஃபார்ம் வாங்க." என்றாள்,மீனா.அடுத்த வாரம் சம்பளம் வந்து வாங்கலாம், என்றாள்,அம்மா நீலவேணி.
"ஸ்கூலில் கடை மூடிவிடும். எப்படி வாங்கறதாம்? நீலக் கலரிலே முப்பது ஷேட் இருக்கும். தப்பான கலரில் யூனிஃபார்ம் போட்டா ஸ்கூலில் திட்டுவார்கள். என்னம்மா; ஒவ்வொரு வருஷமும் ஏதாவது ஒரு வில்லங்கம்; போன வருடம் ஸ்கூல் ஃபீஸே இரண்டு மாதம் கழித்துத் கட்டினாய்;" ஆற்றாமையில் அழுதாள் மீனா.

குமரன்," இதுக்குப் போய் ஏன் அழணும், மீனா? நாம் பாம்பே டையிங் ஷோ ரூமில் போய் வாங்கலாம். இதே நீலம் கிடைக்கும். யூனிஃபார்ம் துணியில் ஒவ்வொரு மீட்டர் இடைவெளியிலும் பாம்பே டையிங் பெயர் அச்சிட்டிருப்பார்கள். கீழே ஒரு நம்பர் போட்டு இருப்பார்கள். அதுதான் அந்தக் கலரோட நம்பர். அந்த நம்பரை இன்று பார்த்து எழுதிட்டு வரேன். அம்மா சம்பளம் வந்து சௌகரியமாய் வாங்கலாம்."
நீலவேணி பிரமித்து விட்டாள். மீனா எப்போதும் முதல் ரேங்க். குமரன் பத்திலிருந்து இருபது ரேங்க் தான். வாங்குவான். அதனால் என்ன? இவன் சுமாராய் படித்தாலும், வாழ்க்கையில் தேறிடுவான்.
ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு
மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?
பாட்டியானாலும் பிரச்சினை!
"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!
புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!
நான் கம்ப்யூட்டர் கற்ற கதை
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?
{{comments.comment}}