சந்தேகம் எனும் வித்து

Jul 27, 2026,03:05 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


புவனியால்  வாய் பொத்தி, கண் மலரை விழிக்கத்தான்  முடிந்தது.  அண்ணி மேகலா  தொடுக்கும் கேள்விக் கணைகளுக்கு பதில் இல்லை.  அவளிடம். உருகி உருகி காதல் செய்து பல தடைகளைத் தாண்டி  கல்யாணத்தில் இனிதே முடிந்த  கல்யாணம், இத்தனை விரைவில் முடிந்து போகும் என்று யார் எதிர்பார்த்து இருப்பார்கள்?          

          

திருமணமாகி இரண்டு வாரங்களில்,மனம் ஒத்து வரவில்லை, என்று ஒற்றை வார்த்தையில் பதில்; மாதவனை விவாகரத்து  செய்வதற்கு   சரியான பதிலாக அண்ணி மேகலாவுக்கு இருக்காது. அவளுக்கே அது ஏற்புடையதாக  இல்லை. சந்தேகம் என்ற வித்து விளைந்து கிளை பரப்பி விருட்சமாகி விட்டதோ; என்ற அச்சம்,புவனிக்கு.


மாதவனும் இந்த முடிவில் இருந்தது தான் அவளுக்கு எதிர்பாரா  ஆச்சரியம். பணி உயர்வுடன் வந்த ஊதிய உயர்வு.அதைத் தொடர்ந்த நாட்களில்தான், அவர்களுக்குள்  புகைச்சலும், வார்த்தை சாடல்களும். மாதவனுக்கு என் மேல் பொறாமையா? நினைக்கவே அபத்தமாய் இருந்தது. இனிமையாக இருக்கவேண்டிய தனிமை  நேரங்கள், முள்ளாய் உறுத்தின.




வார இறுதி  நாடகள் வேம்பாய் கசந்தன. ஒருவரை ஒருவர் தவிர்த்ததை, இருவருமே சங்கடமாய் உணர்ந்தனர். வேறு காரணங்களும் இருக்குமோ?


காரணமின்றி, ரிசப்ஷன்  நிகழ்வின் போது வந்திருந்த  அவனுடைய  சிநேகிதர்கள் குழுவில் இருந்த பெண்களின் முகம் வந்து போக; திருமண வீடியோவை மீண்டும் பார்க்கத் துவங்கினாள்; புவனி . இதே கேள்வியை புவனி ஏன் தன்னையே கேட்டுக் கொள்ளவில்லை; என்பதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை,என்னிடம். 


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்