சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று அக்கட்சியின் விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்வில், "மாற்றத்திற்கான ஒரு பெருங்கனவு" என்ற முழக்கத்துடன் இந்த அறிக்கையை சீமான் வெளியிட்டார். 234 தொகுதிகளிலும் எவ்விதக் கூட்டணியும் இன்றி தனித்து போட்டியிடும் சீமான், இந்த முறை வெறும் வாக்குறுதிகளை மட்டும் வழங்காமல், தமிழ்நாட்டின் கட்டமைப்பையே மாற்றியமைக்கும் சில முக்கியத் திட்டங்களை முன் வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
நாம் தமிழர் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் :
5 தலைநகரங்கள் :

இந்த அறிக்கையின் மிக முக்கியமான அம்சம் 'நிர்வாகப் பரவலாக்கம்'. சென்னை மட்டுமே தமிழகத்தின் மையப்புள்ளி என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில், 5 நகரங்களைத் தலைநகரங்களாக அறிவித்துள்ளார்.
திருச்சி- தமிழகத்தின் மையப்பகுதியில் இருப்பதால் இது 'நிர்வாகத் தலைநகராக' மாற்றப்படும்.
கோவை - தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக 'வணிகத் தலைநகராக' செயல்படும்.
சென்னை - தொழில்நுட்ப தலைநகராக செயல்படுத்தப்படும்.
மதுரை - பண்பாட்டு தலைநகராக செயல்படுத்தப்படும்.
கன்னியாகுமரி - மெய்யியல் தலைநகராக செயல்படும்.
புதிய இட ஒதுக்கீடு முறை:
சமூக நீதிக் கொள்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், தற்போதுள்ள 'சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு' முறையை முற்றிலும் ஒழிப்பதாக சீமான் அறிவித்துள்ளார். இதற்குப் பதிலாக 'தமிழ்க்குடிமக்களுக்கான இட ஒதுக்கீடு' என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நிலை மற்றும் சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, உண்மையான பயனாளிகளுக்கு சலுகைகள் சென்றடைவதை இது உறுதி செய்யும் என்பது சீமான் தெரிவித்துள்ளார்.
மாநில சுயாட்சி:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறையில், தமிழக எல்லைக்குள் இருக்கும் ரயில் போக்குவரத்து நிர்வாகத்தை மாநில அரசின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீமான் உறுதியளித்துள்ளார். இது மாநில சுயாட்சியை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
- குடிநீர் காசுக்கு விற்பதை ஏற்க முடியாது. நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் கட்டணமில்லாத தூய குடிநீர் வழங்கப்படும்.
- மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதிகள் அமைக்க நடவடிக்கை.
- மாநிலத்தில் தன்னாட்சி மத்தியில் கூட்டாட்சி வலியுறுத்தப்படும்.
- தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- சி.பா.ஆதித்தனார் பெயரில் விளையாட்டு பல்கலைக்கழகம்.
- திருநங்கை, திருநம்பிகளுக்கு தனி மருத்துவமனை
- புதிய அணைகள் கட்டப்படும்.
- சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு தனித் தொகுதி.
- தமிழை வழக்காடு மொழியாக மாற்ற நடவடிக்கை.
- வாக்களிப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை.
- வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை.
ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்
புதுச்சேரி கூட்டணி விவகாரம்...டில்லியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை
ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
கத்தார் இயற்கை எரிவாயு நிலையத்தை அதிரடியாகத் தாக்கிய ஈரான்.. அமெரிக்கா அதிர்ச்சி
யுகாதி எனப்படும் தெலுங்கு வருடப் பிறப்பு
ஒரு பிடி மாங்காய் ஊறுகாயும்.. மனதுக்குள் ஊறிக் கிடக்கும் உணர்வும்!
பாட்டி வைத்தியம் (ஒரு நிமிடக் கதை)
விஷாலின் விளையாட்டுகள்.. பேர் சொல்லும் பிள்ளை!
{{comments.comment}}