- கி. அனுராதா
நிர்மலா சிஸ்டர் பாடத்தின் மூலம் மகிழ்ச்சி அடைந்தாலும் சீதாவை இழிவுப் படுத்துவதை நிறுத்தவில்லை. இப்பொழுது அவர் எடுத்த ஆயுதம் மதம். மிகவும் ஆபத்தான ஆயுதம். ஆனால் அந்த ஆயுதத்தின் கூர்மை தான் சீதாவின் வாழ்க்கையில் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு இட்டுச் சென்றது. மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் சீதா முனைவர் பட்டம் பெறும் அளவிற்கு இன்று சீதா இருக்கிறாள்.
அன்று பிரதோஷம். ஆகையால் சிறப்பு வகுப்பு விடுப்புக் கேட்டு சிலர் நின்றிந்தனர். சிஸ்டர், நாங்கள் கோவிலுக்கு செல்ல இருக்கிறோம். பள்ளி முடிந்ததும் செல்ல அனுமதி வேண்டும் என்றனர். அதைக் கேட்டவுடன் சிஸ்டர் சிரித்துக் கொண்டே, என்னடி கோயில் என்றார். என் தோழியோ இன்று பிரதோஷம் என்றாள். மீண்டும் கனத்தக் குரலில் உரக்க சிரித்துக் கொண்டே, எது ? இந்த கல்லுக்கு பால் தயிர் பழம்னு போடுவீங்களே அதானா என்று கேட்டுக் கொண்டே வெளியில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கிறார்கள். அவர்களை விட்டு விட்டு கல்லுக்கு ஊற்றி வீணாக்குகிறீர்கள் என்று கிண்டலடித்தார்.
என் தோழியோ தேவை இல்லாத விஷயத்தை பேச வேண்டாம் சிஸ்டர் என்றாள். அப்பொழுது அந்த சிஸ்டர் நிர்மலா கேட்ட கேள்வி தான் சீதாவை ஆன்மிகத்தை விஞ்ஞானத்துடன் சிந்திக்க வைத்தது. நிர்மலா சிஸ்டர் என் தோழியிடம், " சரி டி ஏன் கல்லுக்கு தண்ணி, பால், கற்பூரம் மற்றும் அலங்காரம் பழம்னு கொட்டுறிங்க சொல்லுங்க பார்ப்போம் என்றார். பதில் தெரியாததால் தலை கவிழ்ந்து சிறப்பு வகுப்பிற்கு அனைவரும் சென்று விட்டோம்.

மறுநாள் வழக்கும் போல் வகுப்பு தொடங்கியது. வருகைப் பதிவேடு எடுத்தவுடன், என் தோழி சிஸ்டர் ஒரு நிமிடம் என்றாள். சிஸ்டரோ என்ன என்பது போல் பார்த்தார். நேற்றைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றாள். அவரும் ஆவலுடன் பாட சம்மந்தப்பட்ட கேள்வி என்று கூறு என்றார். என் தோழியோ கோவிலின் விஞ்ஞானத்தை மிகத் தெளிவாக மற்றும் எளிதாகப் புரியும்படி விளக்கினார். சீதாவிற்கு படு ஆச்சர்யம் , இவ்வளவு உள்ளதா என்று மெய்சிலிர்த்து கேட்டாள். மனதிற்குள் விதையைப் புதைத்தாள்.
சீதாவின் தலைமையில் மீண்டும் தலைமை ஆசிரியர் முன் சிஸ்டர் நிர்மலா நிறுத்தப்பட்டார். மதம் பற்றி விவாதித்து எங்களை இழிவுப் படுத்துகிறார் என்று புகார் அளித்தோம். அந்த நிகழ்வுக்குப் பிறகு சிஸ்டர் நிர்மலா பாடம் கற்றுக் கொடுப்பதை பணியாக இருந்தது. வேறு எந்த உரையாடலும் வகுப்பில் நடக்க இல்லை. இப்பொழுது சீதா தன் வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் கற்றுக் கொடுப்பதை தலைமை ஆசிரியர் பார்த்து விட்டார். மீண்டும் சீதாவின் குழு அந்த அறையில் பஞ்சாயத்து நடந்தேறியது.
தலைமை ஆசிரியர், ஏன் இவளிடம் பாடம் கேட்கிறீர்கள் என்றுக் கேட்டார். சீதாவின் தோழிகள் அனைவரும் ஆசிரியர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே விரிவுரை கூறுகிறார்கள். எங்களுக்கு புரிந்துக் கொள்வதற்கு சிரமமாக இருக்கிறது. ஆனால் சீதா தமிழில் கூறுவதால் எங்களுக்கு புரிந்துக் கொண்டு படிக்க உதவியாய் இருக்கிறது என்றனர். இப்பொழுது தலைமை ஆசிரியர் என் முன் வந்து பாடம் எடு என்றார். சீதாவும் சற்றும் அயராமல் அனைத்துப் பிரிவிலும் ஒரு ஒரு பாடம் எடுத்தாள்.
தலைமை ஆசிரியர்க்கு அவள் எடுக்கும் விதம் பிடித்துப் போய் வருங்காலத்தில் ஆசிரியராய் வருவாய் என ஆசிர்வதித்தார். சீதாவோ இடைமறித்து எனக்கு மென்பொருள் தொழில்நுட்ப பணிப் புரிய வேண்டும் என்று பதில் அளித்தாள். இப்பொழுது பல நேரங்களில் சீதாவின் வகுப்பே நடந்தேறியது.
(தொடரும்)
(கி. அனுராதா ஒரு ஆசிரியை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எம்.ஏ பட்டங்களைப் படித்துள்ளார். இந்தியில் பிஏ முடித்துள்ளார். இதுதவிர 7 டிப்ளமோக்களும் இவரது கல்விச் சொத்தில் அங்கம். 2 பெண் குழந்தைகள், கணவர் விவசாயி. ரத்னா செந்தில்குமாரின் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}