சென்னை: ஆர்.கே.பாலாஜி நடிப்பில் கோகுல் இயக்கியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த பட டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றும், தனுஷ் நடித்த விஐபி படம் போல உள்ளது என்று இப்படத்தின் நாயகன் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. டாக்டர் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டநேஷனல் தயாரிப்பில், 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படப்புகழ் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளப் படம் 'சிங்கப்பூர் சலூன்'. வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில், சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி, லால், ரோபோசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ், ஜீவா கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர் நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடுகிறது. கோகுல் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது, "சுய வேலை குறித்த படம் என்பதால், இது இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனப் பல மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் எனக்கு டிரெய்லர் பார்த்துவிட்டு சொன்னார்கள். தொலைபேசி மூலமாகவும் நேரிலும் நான் சந்தித்த நிறைய பேர் இந்தப் படத்தை தனுஷ் சார் நடித்த 'விஐபி' படத்தோடு ஒப்பிட்டுப் பாராட்டி இருந்தார்கள். அந்த உணர்வை இப்படம் ஊட்டினால் அதுவே எனக்கு சாதனை" என்றார்.

இயக்குநர் கோகுல் பெருமையோடு கூறியதாவது, "படங்கள் எப்பொழுதும் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். பார்வையாளர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களோடு தொடர்பு இருக்கும் வகையிலான மெசேஜ் சொல்வது முக்கியமானது. 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. டிரெய்லர் பார்த்துவிட்டு இந்த படம் 'விஐபி' படம் போல இன்ஸ்பையராக உள்ளது எனப் பலர் கூறியுள்ளனர். அப்படியான ஒரு ஹிட் படத்தோடு எங்கள் படத்தை ஒப்பிட்டு பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி" என்றார்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}