கனவுகளை நனவாக்கிய நாயகன்... முயற்சியின் முகம், வெற்றியின் சிகரம்!

Feb 17, 2026,01:24 PM IST

- அ.சீ.லாவண்யா


சென்னை:  கனவுகளை நனவாக்கிய நாயகன், முயற்சியின் முகம், வெற்றியின் சிகரம்.. இதெல்லாம் கற்பனையான வார்த்தைகள் இல்லைங்க.. உண்மையிலேயே சிவகார்த்திகேயனுக்குப் பொருத்தமான பதங்கள்தான் இவையெல்லாம். அந்த அளவுக்கு அந்த வார்த்தைகளுக்கு அவரும் அர்த்தம் கொடுத்துள்ளார்.


17 பிப்ரவரி 1985 அன்று சிவகங்கையில் பிறந்த சிவகார்த்திகேயன் இன்று திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை எல்லோருக்கும் தெரிந்த முகமாக உயர்ந்து நிற்கிறார். எல்லோரது குடும்பத்திலும் ஒரு பிள்ளையாக பார்க்கப்படுகிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை.


சாதாரண குடும்பத்தில் இருந்து சாதனை உலகிற்கு உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். சிறிய மேடைகளில் தொடங்கிய அவர், இன்று கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ளார்.




சிவகார்த்திகேயன் சிறுவயதிலிருந்தே கலையிலும் நகைச்சுவையிலும் ஆர்வம் கொண்டவர். அவர் திருச்சியில் உள்ள JJ College of Engineering and Technology-பொறியியல் பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களிலேயே  ஒரு மேடையையும் அவர் விட்டு வைத்தது கிடையாது. கிடைத்த மேடைகளில் எல்லாம் கலக்கினார். தனது திறமையை வெளிப்படுத்தினார்.


ஒரு மனிதனின் வாழ்வின் இலட்சியம் மற்றும் கனவு ஒரே பாதையில் இருக்குமேயானால் அவன் அவனுடைய வாழ்க்கையின் வெற்றி என்னும் சிகரத்தினை தொடுவான். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களும் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் அவருடைய நடிகர் ஆக வேண்டும் என்ற கனவில் அயராது உழைத்து நமக்கு ஒரு சிறந்த முன்உதாரணமாக மக்களின் பார்வையில் ஒரு சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து உள்ளார்.


அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ஏற்பட்டது. விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நகைச்சுவை  திறமையால் மக்களின் மனதை கவர்ந்தார். அதன் பின் தொகுப்பாளராகவும் பிரபலமானார். அந்த மேடைகள் அவரை பெரிய திரைக்கு இட்டுச் சென்றன.


சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தவர் இப்போது  ஒரு உச்ச நடிகராக, மக்களின் மனதில் விருப்ப நடிகராகவும் உயர்ந்து நிற்கிறார்.


சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் என விஸ்வரூபம் எடுத்தவர், அமரன் படத்தின் மூலம் மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டார். 


அவரது எளிமை, நகைச்சுவை மற்றும் சமூக கருத்துகள் கொண்ட கதைகள் அவருக்கு பாராட்டுகளையும், பல விருதுகளையும் பெற்றுத் தந்தன. தயாரிப்பாளராகவும் பாடகராகவும் தன்னை நிரூபித்துள்ளார். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.


சிவகார்த்திகேயனின் வாழ்க்கை சாதாரண இளைஞனும் கடின உழைப்பால் உயர முடியும் என்பதை உணர்த்துகிறது. அவரின் பிறந்த நாள், அவரது சாதனைகளை நினைவுகூரும் சிறப்பு நாளாகும். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்!


கனவில் உறுதி என்றால் சிகரமும் உன் கையில்.


(அ. சீ. லாவண்யா, வளரும் இளம் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மல்லிகையே ஓ மல்லிகையே..!

news

எடப்பாடி பழனிச்சாமியுடன் ராமதாஸ் தரப்பு பாமக எம்.எல்.ஏ அருள் திடீர் சந்திப்பு!

news

கனவுகளை நனவாக்கிய நாயகன்... முயற்சியின் முகம், வெற்றியின் சிகரம்!

news

"மேம், எங்கே போறீங்க?".. அவளின் (ல்) அவன் (2)

news

2026-27 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

news

பட்ஜெட் 2026: மக்களின் நம்பிக்கையைத் தகர்த்த திமுகவின் 'கடைசி' ஏமாற்று வேலை: அண்ணாமலை

news

தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க இன்றும் குறைவு தான்... இதோ முழு விலை நிலவரம்!

news

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026-27.. தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

news

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்