தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்: சத்யபிரத சாகு தகவல்

Mar 27, 2024,03:55 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தலைமை தேர்தல்  அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.


2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற உள்ளது. மொத்தம் 40 தொகுதிகளில்  ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சியினர்  தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். 


வெயில் அடிப்பதையும் பொருட்படுத்தாது வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் விறுவிறுப்பு காட்டி வருகின்றனர். இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நாளை வேட்பமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பில் போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:


வாக்காளர் விபரம்




6.23 கோடி வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்த வாக்காளர்களில் 3.17 கோடி பேர் பெண் வாக்காளர்கள். ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி பேர். மூன்றாம் பாலினத்தவர் 8,465 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். 


முதல் தலைமுறை வாக்காளர்கள் 10,90,547 பேர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் 7 லட்சம் பேர் தேர்தல் பணிகள் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் 80 வயதுக்கு மேற்பட்ட 6.13 லட்சம் பேர் வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்.


ரூ. 70 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், மதுபானம் பறிமுதல் 


தேர்தல் அலுவலர்களுக்கு ஏப்ரல் 7க்குள் 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த தேர்தலை விட கூடுதலாக 177 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் 117 தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். 191 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது. 


648 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிக்கு நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வழங்க இன்று கடைசி நாள் ஆகும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை ரூபாய் 70 கோடி மதிப்புள்ள பணம் தங்கம் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


1950-ல் தேர்தல் புகார் தரலாம்


ரொக்கமாக மற்றும் 33 கோடியும், ரூபாய் 33 கோடி மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 1.27 கோடி மதிப்புள்ள மதுபானம் உள்ளிட்ட பிற பொருட்கள் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தனியார் கட்டடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 


தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம். தேர்தல் விதிமீறல்கள் பற்றிய புகார் அளிப்பவர்கள் தங்கள் விவரத்தை மறைத்து விட்டு புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்

news

சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்

news

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!

news

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

news

திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்