டெல்லி: 2024 ஆம் ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது. இந்த சூரிய கிரகணம் நிகழும் போது 4 நிமிடங்கள் முதல் 27 வினாடிகள் பகல் பொழுது முழுமையாக இருளாக இருக்கும். ஆனால் இதை இந்தியாவில் பார்க்க முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதைப் பார்க்க முடியும்.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர்க்கோட்டில் சந்திரன் ஒரு புள்ளியில் வரும். அப்போது சூரியனை மறைக்கும். இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இதில் முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம் என பல வகைகள் உள்ளன.
இந்த ஆண்டில் இன்று முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாட்டில் மட்டுமே தெரியும். குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 18 மாகாணங்களில் இந்த அரிய சூரிய கிரகணம் தென்படும். இந்த சூரிய கிரகணம் நிகழும் போது ஒரு சில பகுதிகளில் இருளாக காணப்படும்.
இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கி, அதிகாலை 2.22 மணிக்கு முடிகிறது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் இரவு நேரத்தில் தொடங்கி அதிகாலையிலேயே முடிவடைவதால், இதனை நம்மால் காண முடியாது. மேலும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாட்டில் இந்த சூரிய கிரகணம் பிற்பகல் 3:20 மணிக்கு தென்படும். இதனால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் இந்த சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தை மெக்சிகோ பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசிப்பவர்கள் தான் முதலில் காண்பர். இது மொத்தம் இரண்டரை மணி நேரம் நிகழும். கடந்த 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வருடம்தான் மிக நீண்ட நேரம் சூரிய கிரகணம் நிகழ்கிறது. 54 வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்த அரிய வகை சூரிய கிரகணம் நிகழ்வதால் இதனைக் காண மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
நாசாவின் அறிக்கைப்படி, முழு சூரிய கிரகணம் 4 நிமிடம் 27 வினாடிகள் வரை நீடிக்கும். சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியிலிருந்து சுமார் 2.23 லட்சம் மைக்கல் தொலைவில் காணப்படும். இந்த சூரிய கிரகணம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக நேரம் நிகழ்கிறது. அப்போது பூமி மீது முழுமையாக இருள் சூழ்ந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. ஏனெனில் அவ்வாறு பார்த்தால் கண்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு ஏதுவான கண்ணாடிகளை அணிந்து பார்ப்பது பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}