பெங்களூரு: எனது மனைவி நடிகை செளந்தர்யா குறித்தும், நடிகர் மோகன்பாபு குறித்தும் கடந்த சில நாட்களாக பொய்யான அவதூறு பரப்பப்படுகிறது. இதை முற்றாக நான் நிராகரிக்கிறேன் என்று நடிகை செளந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு கூறியுள்ளார்.
மறைந்த நடிகை செளந்தர்யாவின் சொத்தை நடிகர் மோகன்பாபு மிரட்டிக் கேட்டதாகவும், அதைக் கொடுக்க செளந்தர்யா மறுத்ததால், அவரை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்க வைத்து மோகன்பாபு கொன்று விட்டதாகவும் சிட்டிமல்லு என்ற நபர் கம்மம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து செளந்தர்யாவின் கணவர் ஜி.எஸ். ரகு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள சொத்து தொடர்பாக மோகன்பாபு குறித்தும், எனது மனைவி மறைந்த செளந்தர்யா குறித்தும் பொய்யான அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இவை எல்லாமே அடிப்படை இல்லாத அவதூறான பொய்யான செய்தி என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நடிகர் மோகன்பாபு, செளந்தர்யாவுக்குச் சொந்தமான எந்த சொத்தையும் வலுக்கட்டாயமாக பறிக்கவில்லை, வாங்கவில்லை.
மேலும் எனக்குத் தெரிந்தவரை மோகன்பாபுவுடன் எந்த சொத்துப் பரிமாற்றமும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. கடந்த 25 வருடத்திற்கும் மேலாக எனக்கு மோகன்பாபுவைத் தெரியும். அவருடன் நல்ல நட்பு உள்ளது. எங்களது குடும்பங்கள், எனது மனைவி, மாமியார், மைத்துனர் ஆகியோர் மோகன்பாபுவுடன் நல்ல உறவையும், மரியாதையையும் கொண்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மோகன்பாபு சாரை நான் மதிக்கிறேன். எங்களுக்குள் நல்லுறவு உள்ளது. குடும்பமாக நாங்கள் பழகி வருகிறோம். எனவே மோகன்பாபு சாருடன், எங்களுக்கு எந்தவிதமான சொத்துப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே இந்த பொய்யான செய்தியை பரப்புவதை அனைவரும் நிறுத்த வேண்டும். இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு கடந்து செல்லுமாறு அனைவைரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ரகு.
மகிழ்ச்சி.. அழகான தொற்று!
தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு விபரம்!
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்.. சிறந்த காமெடியன்.. கதாசிரியர்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 20, 2025... இன்று நல்ல செய்திகள் தேடி வரும்
மார்கழி 05ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 05 வரிகள்
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
{{comments.comment}}