சென்னை: தென் மேற்குப் பருவ மழைக்காலம் இன்று முதல் முடிவுக்கு வருகிறது. தென்மேற்கு மழை காலம் படிபடியாக குறைந்து அடுத்து வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக செப்டம்பர் 17ம் தேதியுடன் இந்த மழை முடிவடையும். ஆனால் இந்த ஆண்டு எட்டு நாட்கள் கழித்து இன்றுடன் விடை பெறுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்த தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டில் கூடுதலாகவே பெய்துள்ளது. அதிலும் குறிப்பாக, சென்னையில் 8 சதவிதத்திற்கும் அதிகமாக கூடுதல் மழை பெய்துள்ளது.
தொடர்ந்து சென்னையிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேலும் கூடுதல் மழை தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானில் தென் மேற்குப் பருவ மழை தற்போது விடை பெற்று விட்டது. இந்தியாவின் இதர பகுதிகளிலும் இது படிப்படியாக விடைபெறும்.
செப்டம்பர் 30ம் தேதியுடன் தென் மேற்குப் பருவ மழை நாடு முழுவதும் முடிவுக்கு வரும். அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 3வது வாரத்தில் வட கிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}