தீபாவளி வந்தாச்சு.. ஊருக்குப் போய் கொண்டாடலாமா.. 14,086 ஸ்பெஷல் பேருந்துகள் ரெடி மக்களே!

Oct 21, 2024,05:57 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.


நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். தீபாவளி மறுநாள் நவம்பர் 01ம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாள் என்பதால் உடனடியாக ஊர் திரும்புவது பலருக்கும் சிரமமாக இருக்கும் என்பதால்  தீபாவளிக்கு மறுநாள் அதாவது நவம்பர் 01  வெள்ளிக்கிழமை, விடுமுறை அளிக்க விட வேண்டும் என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிற்கு நவம்பர் 01ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.




இதனால், இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு வியாழன், வெள்ளி சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இருப்பினும் எப்போதுமே வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வரும்  தொடர் விடுமுறை நாட்களில்  மக்கள் வீட்டில் இல்லாமல் வெளியே சென்று தங்கள் பொழுதுகளை கழித்து வருகின்றனர். இதற்காக ஏராளமான மக்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களை நாடி செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்க்க அரசு சார்பில் சிறப்புகள் பேருந்துகள் இயக்குவதை வழக்கமாக செயல்படுத்தி வருகிறது. 


இந்த நிலையில்   மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர். தீபாவளி தொடர் விடுமுறை காலகட்டங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல  பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு கூடுதல் 14,085 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.


சென்னையிலிருந்து அக்டோபர் 28 முதல் 30 வரையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக  11 ஆயிரத்து 176 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரத்து 910 பேருந்துகள் என  தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை:


அதேபோல் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்லும் மக்கள் சில காரணங்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாததாலும், டிக்கெட் கிடைக்காததாலும் கடைசி நேரத்தில் ஆமினி பேருந்துகளை நாடுகின்றனர். இதனை சாதமாக பயன்படுத்தும் தனியார் பேருந்து நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலித்து வருவதை தொடர்வையாக வைத்து வருகின்றனர். இதனை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது.


இருப்பினும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு தான் வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க 18004256151,  044- 24 749002, 044-26280445, 044-26281611 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்