சென்னை: விடுமுறை கால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மதுரை- தாம்பரம் இடையே இன்று இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப பெரும் திரளாக மக்கள் ரயில் நிலையங்களில் கூடி வருகின்றனர். ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியலும் அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் பொதுமக்களின் நலனுக்காக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோருக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி மதுரையில் இருந்து இன்று இரவு 8.50 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்று நாளை புதன்கிழமை காலை 6.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில்,பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மதுரை - தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், மதுரையில் இருந்து இன்று இரவு 8. 50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் : 06184) திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக நாளை புதன்கிழமை காலை 6:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலின் வருகையால் சென்னை திரும்பும் பயணிகளிடையே மகிழ்ச்சி நிலவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}