போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!

Dec 26, 2025,01:21 PM IST

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தில், இன்று பெண் ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் போராட்டக் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மற்றும் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இன்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வாளகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஆசிரியை ஒருவர், உடல்நலக்குறைவு காரணமாக நிலைகுலைந்து திடீரென மயங்கி விழுந்தார்.




ஆசிரியை மயங்கி விழுந்ததைக் கண்ட சக ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். உடனடியாகஅங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். காவல்துறையினர் மற்றும் சக ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீண்ட நேரமாக உணவின்றி வெயிலில் நின்றதே அவர் மயங்கி விழுந்ததற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.


இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போராட்டக் களத்தில் பதற்றம் மேலும் அதிகரித்தது. "எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் வந்தாலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்க மாட்டோம்" என ஆசிரியர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


ஆசிரியை மயங்கி விழுந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவதால், இந்த விவகாரம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!

news

வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!

news

ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்

news

வங்கதேச மக்களுக்காக... 17 ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கிய முன்னாள் பிரதமரின் மகன்!

news

போராட்டங்கள் பல.. இறுதியில் அழகான வெற்றி.. After the Struggle, I Shine !

news

ஆயிரம் முகங்களை கடந்த பயணத்தில்.. Express the emotion getting someone

news

ஒரு பேனாவின் முனுமுனுப்பு.. The Whisper of the PEN

news

போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!

news

அரசியல் பேசத் தடை...நாளை ஜனநாயகன் ஆடியோ விழாவில் விஜய் என்ன பேசுவார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்