சமர்ப்பணம்

Aug 31, 2026,04:59 PM IST

- சுதா திருநாராயணன், திருச்சி


"ரொம்ப பசிக்குதே" என்றார் சலபதி மனைவி பத்மாவை பார்த்து. "ஏதாவது பால் பழம் இருக்கான்னு பாக்கறேன் "


கூடத்தில் இருந்து  வந்த வாசனையை  சலபதியின் மூக்கு  மோப்பம் பிடித்தது. நாக்கு சப்புக் கொட்டியது.


"அதெல்லாம் பூண்டு வெங்காயம் சேர்த்தது,  நமக்கு வேண்டாம்." என்றாள் பத்மா. "சின்ன தட்டுல திராட்சைப்பழம் வச்சு இருக்குமே"


"இன்னிக்கு சாயங்காலம் ஒண்ணுமே வைக்கல."


"காலம்பர என்ன வெச்சா? " 




"வாழைப்பழம் மட்டும்தான் "


"ரெண்டு மூணு நாளாவே சரியான சாப்பாடு பண்ணல. ஏதோ விருந்து. நம்மள மறந்துட்டா. நீ எங்க கவனிச்ச உனக்கு ஆயிரம் ஜோலி." 


அப்போது கதவு திறந்தது. 5 வயது குழந்தை குமுதா உள்ளே வந்தாள். கையில் பீட்சா. "உம்மாச்சி, இந்தா சாப்பிடு. எது சாப்பிட்டாலும் உம்மாச்சிட்ட சொல்லிட்டு தான் சாப்பிடணும் அப்படின்னு பாட்டி சொல்லி இருக்கா." என்றவாறு குழந்தை கையை நீட்டி வெங்கடாசலபதிக்கும் பத்மாவதி தாயாருக்கும் பீட்சாவை சமர்ப்பித்தாள். பெருமாளும் தாயாரும் புன்னகை புரிந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இதுவும் கடந்து போகும்- ரம்யாவின் கவிதைத் தோட்டம் (5)

news

Success A Journey of Struggle

news

கண்டிக்கா பிள்ளை கெடும் கடன்பட்டால் வாழ்வு கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (6)

news

வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!

news

தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!

news

சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்: 10 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் வானிலை மையம் எச்சரிக்கை!

news

இன்று முதல் சென்னையில் மழை தீவிரமடையும் : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

news

தென்தமிழ் தலையங்கம்: "ரெட், மஞ்சள், ஆரஞ்சு" - வானிலை அலர்ட்டுகளும், மக்களின் விழிப்புணர்வும்!

news

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

அதிகம் பார்க்கும் செய்திகள்