மாசிலா மனிதராய் வெற்றித்தடம் பதித்த புனிதர்.. அப்துல் கலாம்!

Jul 27, 2026,04:22 PM IST
- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி மோகன்

அன்னை பூமி ராமேஸ்வரமதில் வரமாய் அவதரித்தாய்!
ஆனந்த வாழ்வு எலாம் துறந்து தாய் மொழியில் கல்வி கற்று உயர்ந்தாய்!

இஸ்லாமிய மதத்தவரானாலும் ஏனைய மதத்தவரையும் நேசித்தாய்!
ஈடில்லா சுவாமி சிவானந்தா தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தாய்!

உன்னதமான விஞ்ஞானி ஆகக் கனவு கண்டிருந்தாய்!
ஊர் போற்ற ஏவுகனை நாயகனாய் பெயரெடுத்தாய்!

எத்தனையோ பதவி வகித்தும் மக்கள் ஜனாதிபதியாய் மனம் நிறைந்தாய்!
ஏற்றமுடன் அரசுப்பணியில் இருந்தும் எளிமையை கடைபிடித்தாய்!

ஐக்கிய நாடுகளும் நின் அறிவியல் திறன் பேசி வியக்க வைத்தாய்!
ஒரு மாமனிதராய் வாழ்ந்த காவியத்தை அக்னிச்சிறகுகளாய்த் தந்தாய்!





ஓராயிரம் அல்ல கோடானுகோடி மக்கள் மனதில் இடம் பிடித்தாய்!
ஒளடதமில்லா வாழ்வை  மேற்கொண்டு மண்ணைவிட்டு மறைந்தாய்!

அஃதே மனித நேயம் பசுமை பூமி என்று வித்திட்ட நீ இறந்தும் மக்கள் மனதில் நீங்கா( த) இடம் பிடித்தாய்!

கல்வியே நல் வாழ்வுக்கு வழி என போதித்தாய்!
சாமான்யனாய்ப் பிறந்து சரித்திரம் படைத்தாய்!
தமிழ் மண்ணின் மைந்தன் நின் பெருமையை உலகம் போற்றச் செய்தாய்!
முயற்சியும் பயிற்சியும் ஏற்றம் தரும் மந்திரம் எனப் பயிற்றுவித்தாய்!

அரச பதவியில் ஏகபோக வாழ்க்கை வாழ வழியிருந்தும் ஆடம்பரம் தவிர்த்தாய்!
மக்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே மண்ணில் விழுந்து மறைந்தாய்!
தாயிற்சிறந்த தயாவானவராய் எம் கண்ணில் கண்ணீரை வரவழைத்தாய்!

மாசிலா மனிதராய் வெற்றித்தடம் பதித்த புனிதர் நீ 
இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருக்கலாம்!!! 
பல்லாண்டு நீ வாழ்ந்திருக்கலாம்!!!

(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர். நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்