Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

Apr 08, 2025,05:54 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


வெளியில் அடிக்கும் வெயிலுக்கு உடம்பெல்லாம் வறண்டு போய் விடுகிறது. நாவெல்லாம் வறள்கிறது. இப்படிப்பட்ட கோடைகாலத்தில் நாம் கண்டிப்பாக கூலான பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் உடம்பைப் பாதிக்காத வகையில் இயற்கையான குளிர்ச்சி தரும் உணவுகளை அதிகம் எடுப்பது சிறந்தது.


அப்படிப்பட்ட ஒரு அபாரமான பானம்தான், கருப்பு கவுனி அரிசி மோர் கூழ்.


தேவையான பொருட்கள்


1 . கருப்பு கவுனி அரிசி ஒரு கப்

2 . கெட்டி தயிர் ஒரு கப்

3. சிறிய வெங்காயம் 10 தோலுரித்து பொடியாக கட் செய்யவும்

4. இந்து உப்பு தேவைக்கு ஏற்ப.


செய்முறை




1 .கருப்பு கவுனி அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் வடிகட்டி மிக்ஸியில் கோதுமை ரவை பதத்திற்கு அரைக்கவும். (குறிப்பு :அரிசி ஈரப்பதத்துடன் அரைக்கவும்)


2 . ஒரு குக்கரில் மிக்ஸியில் அரைத்த கருப்பு கவுனி அரிசியை போடவும் ,(இரண்டு +1/2கப் தண்ணீர் அளந்து கொள்ளவும்) மொத்தம் இரண்டு அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்கவும். (குறிப்பு :ஒரு மணி நேரம் ஊற வைத்தால் நன்றாக இருக்கும் )மூன்று அல்லது நான்கு விசில் வந்தவுடன் ஸ்டவ் அணைத்து விடவும்.


நன்றாக சூடு ஆறிய பிறகு கட் செய்த சிறிய வெங்காயம் ,உப்பு தேவைக்கு சேர்த்து பிறகு தயிரை நன்றாக கடைந்து அதனில் சேர்க்கவும்.


கூழ் போன்ற பதத்தில் கலக்கி ஒரு பவுலில் பரிமாறவும். கோடை வெயிலுக்கு இது அருமையான ஃபில்லிங்கான உணவு. உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தருவதுடன் அதீத சக்தி வாய்ந்தது இந்த கருப்பு கவுனி அரிசி கூழ். இதற்கு சைட் டிஷ் ஆக மாங்காய் ஊறுகாய், மிளகாய் வற்றல் போன்றவை சேர்த்துக் கொள்ள அதீத ருசியாக இருக்கும்.


பயன்கள்


வெள்ளை பழுப்பு அரிசியை விட அதிக சத்துக்களை கொண்டது கருப்பு கவுனி அரிசி. இதில் ஆழமான கருப்பு அல்லது ஊதா நிறம் அதன் உயர் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் குறிக்கிறது. பழங்காலத்தில் இதனை "எம்பரர்ஸ் ரைஸ் "என்று அழைப்பார்கள்.


மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை சரி செய்யும். மேலும் நரம்புகளுக்கு மிகச் சிறந்தது. புற்றுநோய் தடுக்கிறது இது இயற்கை நச்சு நீக்கி. முடி வளர்ச்சிக்கு தேவையான பிற புரதங்களுடன் பயோடின், வைட்டமின் பி ஆகியவற்றை வழங்குகிறது.


கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைய உதவுகிறது. இந்தக் கோடை வெயிலுக்கு இதைப் போன்ற உணவுகளை தயாரித்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வு மேற்கொள்ளலாம்.


மேலும் இது போன்ற ரெசிபிகளுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு

news

ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!

news

புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்

news

ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!

news

Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?

news

புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!

news

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு

news

"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு

news

vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்