Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!

Oct 15, 2026,04:42 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


அந்தக் காலத்தில் மனிதர்கள் மணல் கடிகாரம் (sand clock) சேண்ட் கிளாக் வைத்து நேரத்தை கணக்கிட்டனர். ஆனால் இன்று நம் கைகளில் கடிகாரம்,சுவற்றில் தொங்கும் கடிகாரம், நாம் கையில் கட்டும் ஸ்மார்ட் வாட்ச்சில் கடிகாரம் என்று உலகம் தொழில்நுட்பத்தில் மிகவும் பரந்து விரிந்து உள்ளது நினைத்துப் பாருங்கள் பாஸ்..


இன்றைய ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை அந்த கால மன்னர்களின் வாழ்க்கையை விட பல வகைகளில் வசதியானது, அற்புதமாக உள்ளது. ஏனெனில், அந்த காலத்தில் மண்ணெண்ணெய் விளக்கில் வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்று ஒரு  ஸ்விட்ச்சை தட்டினால் விளக்கு எரிகிறது. காற்றாடி சுழல்கிறது. படுக்கையறையில் ஏசி அவரவர் வசதிக்கேற்ப ஒவ்வொரு அறையிலும் ஏசி ரிமோட் கண்ட்ரோல் வைத்து அறையை குளுமையூட்டி   உறங்குகிறோம் . அந்தக் கால மன்னர்கள் கூட இப்படி உறங்கியதில்லை, வாழ்ந்ததில்லை.


காலை எழுந்தவுடன் ஒரு ஸ்விட்சை தட்டி தண்ணீர் குழாயைத் திறந்தால்  ஹீட்டர் (geyser) மூலமாக  சுடு தண்ணீர் வருகிறது. ஆனால், அந்த காலத்தில் விறகு அடுப்பில் சுடுதண்ணீர் காய வைத்து குளித்து வந்தனர். இன்று அப்படியா? இருக்கிறோம். நிமிடத்தில் சுடு தண்ணீர்  வருகிறது.  இந்த கால தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எவ்வளவு வசதியாக உள்ளோம். சிந்தித்துப் பாருங்கள் பாஸ்...



 

அந்த காலத்தில் கடிதம் மூலமாக விஷயங்களை பரிமாறிக் கொண்டிருந்தோம். ஆனால், இந்த காலத்தில் எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் நம் கைப்பேசியின் மூலமாக உலகத்தில் எந்த மூலையில் இருப்பவரிடமும் பேசலாம்.  இல்லையா?  அமெரிக்காவில் இருப்பவரும் கூட நம் வீட்டு அறையில் இருப்பது போல் வீடியோ காலில் (video call )பேசிக் கொண்டிருக்கிறோம்.


நாம் இந்த காலத்தில் எவ்வளவு வசதியுடன் இருக்கிறோம் சிந்தித்துப் பாருங்கள் பாஸ்.. அந்த காலத்து மன்னன் இந்த வாழ்க்கையை வாழ்ந்து இருப்பாரா!...


அந்த காலத்தில் விறகு அடுப்பில் உணவை சமைத்து உண்டனர். இன்று அப்படியா? கேஸ் அடுப்பு,இண்டக்ஷன் ஸ்டவ், மைக்ரோ ஓவன் என்று விதவிதமான உணவு தயாரிக்கும் மிஷின்கள் உள்ளன. ஆனாலும்,இதையும் பயன்படுத்தாமல் நிமிடத்தில் ஆர்டர் செய்தால் உணவு வீட்டிற்கே நம்மைத் தேடி வருகிறது.


 மாவு அரைக்க,சட்னி அரைக்க -ஆட்டுக்கல், அம்மிக்கல் என்று பயன்படுத்திய காலம் அந்த காலம்.ஆனால், இந்த காலத்தில் மிக்ஸி, கிரைண்டர் என்று விதவிதமான மிஷின்கள் வந்துள்ளது. ஆனால் அதையும் பயன்படுத்துவதில்லை... ரெடிமேட் மாவு,ரெடிமேட் சட்னி,ரெடிமேட் பொடிகள் என்று பயன்படுத்தி வருகிறோம்.

 இந்த காலத்தில் எத்துணை வசதிகள் சிந்தித்துப் பாருங்கள் பாஸ்.. 


பள்ளிக்குச் சென்று படிக்கும் காலம் போய் இன்று ஆன்லைன் வகுப்புகள் வீட்டிலிருந்து படிக்கும் வசதியுடன் உள்ளோம். இல்லையா? இன்று கம்ப்யூட்டர் மூலமாக வகுப்பறைக்குச் செல்லாமல், வகுப்பறையே நம்மைத் தேடி வரும் காலத்தில் உள்ளோம். சிந்தித்துப் பாருங்கள் பாஸ்...


சொர்க்கம் vs நரகம்: 


கடவுளே நேரில் வந்து பார்த்தால் உன்னை நான் சொர்க்கத்திற்கு தானே அனுப்பியுள்ளேன். "நீ சொர்க்கத்தில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறாய்" என்பார். ஆனாலும் நாம் அங்கேயும் குறை கூறும் பட்டியலை தயாரித்துக் கொண்டு "என்னடா? வாழ்க்கை இது.. வாழ்க்கையே  நரகமாக உள்ளது" என்று புலம்பிக்கொண்டிருக்கிறோம். 


சிந்தித்துப் பாருங்கள் பாஸ்..


'சொர்க்கம்' என்பது ஒரு இடம் அல்ல.அது நம் மனதிற்குள் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு விழிப்புணர்வு.!

' நரகம்' என்பது ஒரு இடமல்ல. நமக்கு கிடைத்த அனைத்து வசதிகளின் மதிப்பை மறந்து விடும் மனநிலையே ' நரகம். '

 "சொர்க்கமும், நரகமும் மரணத்திற்குப் பிறகு கிடைக்கும் இடங்கள் அல்ல. "


அவை இங்கேயே நாம் வாழும் வாழ்க்கையை திருப்தியுடன், மகிழ்ச்சியுடன் வாழ்வதிலேயே, நம் மனநிலையை பொறுத்து அமைகிறது.  ஒவ்வொருவரும் அவரவர்  நிலைக்கும், நிலைமைக்கும் ஏற்ப வாழ்வின் மீதான பார்வையை சிறந்த எண்ணங்களுடனும், மகிழ்ச்சியுடனும், திருப்தி அடைந்து விழிப்புணர்வோடு பார்க்கத் துவங்கலாம்.


எதிர்மறை எண்ணமே  - நரகம் .

நேர்மறை எண்ணமே சொர்க்கம்'.


"நாம் வாழும் இந்த பூமியே சொர்க்கம் "


ஒவ்வொரு நாளும் அவரவர்க்கு  கிடைத்தவற்றிற்கு இறைவனுக்கு நன்றி கூறி, வாழ்க்கையை வாழலாமே.. சிந்தியுங்கள் பாஸ்....


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்