- ஸ்வர்ணலட்சுமி
நம் தென்னிந்திய உணவில் முக்கிய இடம் பிடித்திருப்பது கமகமக்கும் ரசம். வெறும் சுவைக்காக மட்டுமல்லாது இது உடலுக்கு சிறந்த மருத்துவ குணங்களைத் தரும் ஒரு இயற்கையான சூப் வகை ஆகும்.
புரதம், கால்சியம் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த முருங்கைக்கீரை அடிக்கடி உணவில் பயன்படுத்துவதனால் நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த சோகை நீங்கும். எலும்பு மற்றும் பற்கள் பலம் பெறும். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
உடல் வலி மற்றும் சூடு தணிய பெரிதும் பயன்படும் முருங்கைக்கீரை வைத்து சூப்பரான டேஸ்டியான ரசம் பத்து நிமிடத்தில் செய்துவிடலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டென்று செய்துவிடலாம்.
முருங்கைக்கீரை தக்காளி ரசம் செய்ய முதலில் கிச்சனுக்குள் போகலாம் வாங்க பாஸ்...

தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்கீரை ஒரு கப் ( நன்றாக கழுவியது).
2. வர மல்லி, சீரகம், மிளகு தலா-1 ஸ்பூன்.
3. தக்காளி நன்றாக பழுத்தது- 3 .
4. வரமிளகாய்- 2.
5. தாளிக்க நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்.
6. கடுகு உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்.
7. உப்பு தேவைக்கு ஏற்ப. பூண்டு 6 பல்.
8. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்.
9. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்.
10. மல்லித்தழை சிறிதளவு.
செய்முறை:
1. ஒரு கப் முருங்கைக்கீரையை தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
2. தக்காளி மூன்று மிக்ஸியில் நைசாக அரைக்க வேண்டும்.
3. வாணலியில் வர மல்லி, சீரகம்,மிளகு வறுத்து சிறிய ஆட்டுக்கல்லில் பொடி செய்து கொள்ளவும்.( ஆட்டு கல்லில் அல்லது அம்மியில் அரைக்க மிகவும் டேஸ்டாக இருக்கும் )
4. அதிலேயே பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, கடுகு வெடித்ததும், வர மிளகாய் கிள்ளி போடவும். பொடி செய்த மல்லி சீரகம்,மிளகு, பூண்டு சேர்த்து வதக்கவும்.
6. பிறகு அரைத்த தக்காளி விழுது சேர்க்கவும்.
7. மஞ்சள் தூள் பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும்.
8. அடுப்பை சிம்மில் வைத்து தக்காளி விழுதை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
9. இதில் முருங்கைக் கீரை வேக வைத்த தண்ணீருடன் சேர்க்கவும்.
10. தேவைக்கு ஏற்ப மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
11. ரசம் நுரை கட்டிய பிறகு உடனே அடுப்பை அணைத்து விட வேண்டும்.
12.அதில் மல்லித்தழை கட் செய்து சேர்க்கவும்.

என்ன பாஸ் ரசம் வாசனை கம கமன்னு வருதா...!
அடடா...அடடா... கம கமக்கும் தக்காளி முருங்கைக்கீரை ரசம் ரெடி இதனை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளவும்.
சூடான வடித்த சாதம் அல்லது குக்கர் சாதத்திற்கு அப்பளம் அல்லது வடாம் வைத்து இந்த முருங்கைக்கீரை தக்காளி ரசம் சாப்பிட அப்படி இருக்கும் போங்க.
இந்த முருங்கைக்கீரை தக்காளி ரசத்தில் மிளகு மற்றும் சீரகத்தில் உள்ள காரத்தன்மை தொண்டை கமறல், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற காலத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணி.
உடலின் சோர்வை போக்கி சுறுசுறுப்பு தரும். ரசத்தில் சேர்க்கப்படும் பெருங்காயம், கொத்துமல்லி தழை மற்றும் தக்காளி போன்ற பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றது. கொழுப்பைக் கரைத்து உடல் எடை குறைப்பதற்கும் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.
ஒரு டம்ளர் ரசம் இதுபோல் முருங்கைக்கீரை தக்காளி ரசம் வைத்து சூப் போல குடித்தாலே போதும் உடலுக்கு இவ்வளவு நன்மை தரும்.
என்ன பாஸ் செய்து பாருங்கள்.. அன்புடன் சமைத்து பாசத்துடன் பரிமாறுங்கள்.
மேலும் இது போன்ற சுவாரசியமான சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழ் "சமையல் வித் ஸ்வர்ணா". எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்
கோலாகல கொலு!
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திருவாரூர்!
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்
திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!
6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதிய ஆளுநர்கள் நியமனம்: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநரானார் ராஜேந்திர அர்லேகர்
திருந்திய குரங்கு
{{comments.comment}}