- ஸ்வர்ணலட்சுமி
கவியும், பிரியாவும் இணைபிரியா தோழிகள். இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே மருத்துவ படிப்பு வரை ஒரே வகுப்பில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் ஒரே ஆஸ்பத்திரியில் வேலை புரியும் சிறந்த மருத்துவர்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி 'உலக உணவு தினத்தை 'கொண்டாடி வருகிறோம். இந்த தலைப்பை பற்றி இரு மருத்துவர்களும் ஆற்றிய உரையாடல் இதோ...
கவி: ஹாய்! ப்ரியா.. நாளைக்காலை நம் மருத்துவமனையில் மீட்டிங்கில் உலக உணவு தினத்தை பற்றி உரையாட வேண்டும் இல்லையா? அதனைப் பற்றிய சில ஹிண்ட்ஸ் எழுதுவோமா?என்று கேட்கிறாள்.
பிரியா: வா.. கவி,நாம் இருவரும் டீ குடித்துக் கொண்டே பேசலாமே..என்கிறாள். இந்த உலக உணவு தினம் எப்போது தொடங்கியது? அதனை பற்றி முதலில் எழுதுவோமா? என்கிறாள்.
கவி: ஓகே.. நான் சொல்கிறேன் நீ எழுதுகிறாயா? முதலில் எப்பொழுது துவங்கியது என்பதை பற்றி எழுதுவோமா?
கவி சொல்லச் சொல்ல பிரியா எழுதுகிறாள்.
.jpg)
1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO - Food and Agriculture Organization ) நிறுவப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்த "உலக உணவு தினம்" அனுசரிக்கப்படுகிறது. இது 1979ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் நோக்கம் என்ன?
உலகில் நிலவும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிப்பது. மக்கள் அனைவருக்கும் சத்தான, பாதுகாப்பான ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பதை உறுதி செய்வது. அதுமட்டுமல்ல உணவு வீணாக்குவதை தடுப்பது தலையாயக் கடமையாகும்.
ஹங்கேரி நாட்டின் முன்னாள் வேளாண்மை அமைச்சர் பால் ரொமானி (Pal Romany) தான் இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர். 2026 ஆம் ஆண்டுக்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் "Innovate today. Nourish tomorrow " என்பதாகும்.
"இன்றே புதுமையை புகுத்துவோம் நாளைய ஊட்டச்சத்தை உறுதி செய்வோம் "
இந்த கருப்பொருள் எதனைக் குறிக்கிறது தெரியுமா?
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரிய விவசாய அறிவை பயன்படுத்தி நிலையான உணவு, அனைவருக்கும் எட்டக்கூடிய மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுமுறைகளை, இன்றே புதுமையைப் புகுத்தி நாளைய வருங்கால சந்ததியினருக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்வோம் என்பதுதான்.
150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக உணவு தினத்தின் விழிப்புணர்வு பற்றி பல கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இன்றைய நாளின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால்.. பட்டினியை ஒழித்தல். அதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பான சத்தான உணவு கிடைக்க வேண்டும். நிலையான விவசாய முறைகள், மற்றும் விவசாயத்தில் முதலீட்டை அதிகரிப்பது, உற்பத்தியை பெருக்குவது. விநியோகம் மற்றும் வீடுகளில் உணவு வீணாவதை தவிர்க்கச் செய்ய வேண்டும்.
இது போதும் என்று நினைக்கிறேன் கவி என்று பிரியா கூறுகிறாள். ரொம்ப நல்லா இருக்கு இந்த விளக்கங்கள். Very nice explanation.
பிரியா: சரி..கவி.. நான் fair copy செய்து நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு வரும்பொழுது இதனை எடுத்து வருகிறேன். See you tomorrow என்று விடைபெறுகிறாள்.
உங்களுக்கும் கவியும், ப்ரியாவும் ஆற்றிய உரையாடல் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். உலக உணவு தினத்தை பற்றிய சிறந்த தகவல்களை அறிந்து கொண்டோம் இல்லையா? மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
{{comments.comment}}