விஷ்ணு சஹஸ்ரநாமம்.. அம்புப் படுக்கையிலிருந்து.. பீஷ்மர் கற்பித்த ஸ்தோத்திரம்!

Sep 21, 2026,04:20 PM IST

- தா. மணிமேகலை


விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது மகா விஷ்ணுவின் ஆயிரம் (1000) புனிதப் பெயர்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஆன்மீக ஸ்தோத்திரம் (பாடல்) ஆகும்.


இது மகாபாரதத்தின் அனுசாசனிக பர்வத்தில் இடம்பெற்றுள்ளது. குருச்சேத்திரப் போருக்குப் பின், அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு (தருமருக்கு) இதைக் கற்பித்தார்.


மகாபாரதத்தை எழுதியவரான வியாசர்தான் இதைத் தொகுத்துள்ளார். அப்படிப்பட்ட பெருமைக்குரிய விஷ்ணு சஹஸ்ரநாமம் குறித்து ஒவ்வொரு ஸ்லோகமாக பார்க்கலாம்.


ஹரிஹி ஓம்

ஸ்ரீ கு3ருப்யோ நமஹ


சு2க்லாம் பரதரம் விஷ்ணும் சசி2 வர்ணம் சதுர்புஜம்

ப்ரஸந்நவதனம்

த்யாயேத்

ஸர்வவிக்னோப

சா2ந்தயே




சுக்லாம் பரதரம்

வெண்மையான ஆடை அணிந்தவர்


விஷ்ணும்

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்


சசிவர்ணம்

சந்திரன் போன்ற வெண்மை நிறம் கொண்டவர்


சதுர்புஜம்

நான்கு கைகளை கொண்டவர்


ப்ரஸந்நவதனம்

ஒளி பொருந்திய யானை முகம் கொண்டவர்


த்யாயேத்

இத்தகைய பெருமைக்குரிய விநாயகப் பெருமானை நான் வணங்குகிறேன் 


ஸர்வ 

எல்லா


விகனோப 

தடைகளும்


சாந்தயே 

நீங்கிட தியானிக்கிறேன்🙏


விளக்கம்:


வெள்ளை ஆடை உடுத்தி, சந்திரன் போன்ற நிறமும் நான்கு தோள்களும், யானை முகமும் உடையவரான ஸர்வ வியாபியான விநாயகக் கடவுளை, எல்லா இடையூருகளும் அற்றுப் போவதற்காக, தியானிக்க வேண்டும்.


(தா. மணிமேகலை, பி.காம், திருச்சிராப்பள்ளி. அருள் சக்தி ஆலயம் குழுவில் பகவத்கீதை வகுப்பு எடுக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்