சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் ஓடிடி வெளியீடு, படப்பிடிப்புக்கான நிபந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமானதாக சூப்பர் நடிகர்களின் படங்கள் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அவை:

1.முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு OTT தளங்களில் வெளியிட வேண்டும்.
2. இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களுக்கு பணி புரியாமல் புதியதாக வரும் திரைப்பட நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள் இதனால் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்று இருந்தால் அந்த திரைப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும்.
3. நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்.
4.இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்கிறது. அந்த நிலையை மாற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம் என்பதால் வருகிற 16.8.2024 முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
4 தற்போது படபடப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையாக கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். ஆகையால் தற்போது நடைபெற்று வரும் படபடப்புகளை வருகிற அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களை கேட்டுக்கொண்டனர்.
5. நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால் அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டி உள்ளது. அதனால் வருகிற 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதுதவிர இனி வரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், உள்ளடக்கிய கூட்டுக் குழு (Joint Action Committee) அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் மத்திய அரசை எதிர்பார்ப்பது?...சட்டசபையில் முதல்வர் ஆவேசம்
தமிழ்நாட்டில் 6 ராஜ்யசபா காலியிடங்களுக்கு மார்ச் 16ல் தேர்தல்.. யாருக்கெல்லாம் மீண்டும் சீட்?
அரிசியை இலவசமாக கொடுக்கும் அரசு குவார்ட்டர் பாட்டிலை வழங்காதது ஏன்? சீமான் ஆவேசம்!
உதவித்தொகை கேட்டால் தடியடியா?வீதியில் அலைகழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்:எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
தமிழ்நாடு ராஜ்யசபா தேர்தல்... திமுக, அதிமுக கூட்டணிகளை முறைப்படுத்த உதவுமா?
தமிழகத்தில் நாளை மறுநாள் கொட்டப் போகிறது மழை... வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
மதுரை சித்திரை திருவிழா 2026 எப்போது ? தேதி முழு விபரங்கள் இதோ
தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை: மேயர் பிரியா அறிவிப்பு
{{comments.comment}}